Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட என்னப்பா இப்ப அவசரம்.. 161 போட்டிகளுக்கு பின் ஆமை வேகத்தில் சாதனை செய்த ஜடேஜா!!

Recommended Video

ஐ.பி.எல் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஜடேஜா !!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்கள் வீழ்த்தினார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா.

இந்த 2 விக்கெட்களோடு ஜடேஜா ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்ட அதிக போட்டிகள் எடுத்துக் கொண்ட வீரரும் ஜடேஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

100வது விக்கெட் யார்?

100வது விக்கெட் யார்?

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு வரை 98 விக்கெட்கள் எடுத்திருந்த ஜடேஜா, இந்தப் போட்டியில் ராகுல் திரிபாதி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தி ஐபிஎல் விக்கெட்களில் சதத்தை தொட்டார். ஸ்மித் தான் ஜடேஜாவின் 100வது ஐபிஎல் விக்கெட்.

அதிக போட்டிகள்

அதிக போட்டிகள்

ஜடேஜா 100 விக்கெட்களை எடுக்க 161 போட்டிகள் எடுத்துக் கொண்டுள்ளார். ஜடேஜாவுக்கு முன் இதுவரை 12 வீரர்கள் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்களை கைப்பற்றி உள்ளனர். அவர்களை விட அதிக போட்டிகளை எடுத்துக் கொண்டு அவசரப்படாமல் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் ஜடேஜா.

10வது வீரர்

10வது வீரர்

இந்திய வீரர்களில் இந்த மைல்கல்லை எட்டும் 10வது வீரர் ஜடேஜா. ஒட்டுமொத்தத்தில் 13வது வீரர். அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது லசித் மலிங்கா. அவர் 113 போட்டிகளில் 157 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

முதல் இடம்

முதல் இடம்

இடது கை சுழற் பந்துவீச்சாளர்களில் 100 ஐபிஎல் விக்கெட்களை எடுத்த முதல் வீரர் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது. சுழற் பந்துவீச்சாளர்களில் ஆறாம் இடத்தை பிடித்துள்ளார்.

Story first published: Friday, April 12, 2019, 14:50 [IST]
Other articles published on Apr 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+