ஜெய்ப்பூர்: தன்னை இன்னொரு மிட்சல் ஸ்டார்க் என்று சொல்ல வேண்டும் என்று லக்னோ அணி வீரர் ஆவேஷ் தெரிவித்துள்ளார். தாம் எப்போதும் ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புவதாக கூறிய ஆவேஷ் கான், கடைசி ஓவர் வீசும் போது முதல் 3 பந்துகளுக்கு பவுண்டரி அடிக்க விடக் கூடாது என்பதே திட்டமாக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. கடைசி 3 ஓவர்களுக்கு ராஜஸ்தான் அணி 25 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது, ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து 19வது ஓவரில் 11 ரன்கள் விட்டுக் கொடுக்கப்பட்ட போது, கடைசி ஓவரில் ஒரு விக்கெட் உட்பட 6 ரன்களை மட்டுமே ஆவேஷ் கான் விட்டுக் கொடுத்தார். லக்னோ அணியின் வெற்றிக்கு ஆவேஷ் கானின் பவுலிங் முதன்மை காரணமாக அமைந்துள்ளது. இதனால் டெல்லி அணிக்கு எப்படி மிட்சல் ஸ்டார்க் வெற்றியை பெற்று கொடுத்தாரோ, அதேபோல் ஆவேஷ் கான் லக்னோ அணியை வெற்றிபெற வைத்துள்ளார் என்று பார்க்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆட்டநாயகன் விருது ஆவேஷ் கானுக்கு அளிக்கப்பட்டது. இதன்பின் ஆவேஷ் கான் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. அதில் ஆவேஷ் கான் பேசுகையில், கடைசி பந்தில் பேட்ஸ்மேன் அடித்த பந்தை தடுத்த போது, என் கையை உடைத்து கொண்டேன் என்று நினைத்தேன். அந்த பந்து எனது கை எலும்பில் அடித்ததால், வெற்றியை கொண்டாட முடியவில்லை.
நான் மிட்சல் ஸ்டார்காக மாற விரும்பவில்லை. எப்போதும் ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன். யார்க்கர் பந்துகளை வீசுவதுதான் எனது வலிமை. அதனை ஒவ்வொரு முறையும் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எப்போதும் கூடுதல் தெளிவுடன் பவுலிங் செய்யும் போது, என்னால் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடிகிறது.
பவுலிங் செய்யும் போது ஒருபோதும் ஸ்கோரை பார்க்க விரும்ப மாட்டேன். கடைசி ஓவர் வீசும் போது முதல் 3 பந்துகளில் பவுண்டரியை விட்டுக் கொடுக்க கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். அப்படி செய்தாலே பேட்ஸ்மேன்கள் அழுத்தத்திற்கு செல்வார்கள். அதேபோல் சுபம் துபே அடித்த பந்து உயரத்தில் பறந்த போது, கேட்ச் பிடிக்க மில்லர் ஓடி வந்தார். நிச்சயம் அந்த கேட்சை பிடிப்பார் என்றே நினைத்திருந்தேன்.
ஆனால் மில்லர் கேட்ச்சை விட்டதால், கடைசி பந்தில் 4 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை வந்தது. அப்போது மனதில் சில குழப்பம் வந்தது. ஏனென்றால் ஸ்டம்ப் லைனிற்கு வெளியில் பவுலிங் செய்தால், எட்ஜாகி பவுண்டரிக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால் மிடில் ஸ்டம்ப் லைனில் யார்க்கர் வீச வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. லக்னோ அணிக்காக வெல்ல வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. அடுத்து வரும் போட்டிகளிலும் இப்படியே சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.