Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு வருடமாக விளையாடாதவருக்கு கோடிக்கணக்கில் மதிப்பு.. ஐபிஎல்லில் கெத்து காட்டப்போகும் வீரர்!

சென்னை: ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. எந்த வீரர் எந்த அணிக்கு செல்வார் என்று இப்போதே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன் எந்த அணிக்கு செல்வார் என்ற எதிர்ப்பார்ப்பும் அதிகம் ஆகி உள்ளது. இவரது குறைந்த பட்ச ஏல தொகை 1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அவர் அதைவிட அதிக தொகையில் ஏலம் எடுக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இவர் கடந்த ஒருவருடமாக் கிரிக்கெட் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புயல் டேல் ஸ்டெய்ன்

புயல் டேல் ஸ்டெய்ன்

சமகாலத்த்தில் இருக்கும் பவுலர்களில் மிகவும் சிறப்பானவர் யார் என்று பட்டியல் இட்டால் அதில் கண்டிப்பாக டேல் ஸ்டெய்ன் முக்கிய இடம் பிடிப்பார். 150 கிமீ வேகத்தில் பந்து வீசும் போது கூட இவர் அசாத்தியமாக ஸ்விங் செய்யக்கூடியவர். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இப்போதும் இவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.

ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

இவர் ஐபிஎல் போட்டியிலும் மிகவும் சிறப்பாக வரலாறு வைத்து இருக்கிறார். 2010ல் பெங்களூரு அணிக்காக இவர் தனது ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கினார். இவரது ஆட்டத்தை பார்த்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி தங்கள் அணிக்காக அதற்கு அடுத்த வருடமே ஏலம் எடுத்தது. பவுலிங்கில் வேகம் கட்டுவது போல சண்டையிலும் இவர் வேகம் காட்டினார்.

கோபாமானவர்

கோபாமானவர்

இவர் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் உக்கிரமாக இருப்பார். ஆனாலும் பவுலிங்கில் எப்போதும் வீட்டுக் கொடுத்தது இல்லை. 2016 இவர் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த அணியில் இவர் மட்டுமே சரியாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம்

காயம்

கடந்த ஒருவருடம் இவருக்கு மிகவும் மோசமாக இருந்தது. இவருக்கு வரிசையாக அடிபட்டது. கடந்த வருடம் முழுக்க ஒரு போட்டியில் கூட இவர் விளையாடவில்லை. இவர் கால் நடக்க முடியாத நிலைமைக்கு ஆனது இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

பிரச்சனை

பிரச்சனை

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் மீண்டும் விளையாடினார். ஆனால் முதல் போட்டி முடிவதற்கு முன்பே இவருக்கு காலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் இவர் இன்னும் 5 வாரத்திற்கு போட்டியில் விளையாட முடியாது.

1 கோடி

1 கோடி

தற்போது இவர் ஐபிஎல் போட்டிக்கு மீண்டும் திரும்புவார் என்று கூறப்பட்டு இருக்கிறார். இவருக்கு குறைந்தபட்ச தொகையாக 1 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவரை ஏலம் எடுக்க அனைத்து அணியும் காத்துக் கொண்டு இருக்கிறது. சென்னையில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்பதால் இவர் சென்னை அணிக்கும் எடுக்கப்படலாம்.

Story first published: Friday, January 19, 2018, 22:27 [IST]
Other articles published on Jan 19, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+