Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன ருத்துராஜ் இது.. அறிமுக போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸ்.. ஸ்ட்ரைக் ரேட் வெறும் 45 தான்.. சோகங்கள் !

லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் டெஸ்ட் போட்டியை போல் விளையாடி ரசிகர்களை வெறுப்பேற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ருத்துராஜ் கெய்க்வாட், இந்திய அணியின் அடுத்த நட்சத்திரமாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல், விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர் தொடர்ந்து 4 சதங்களை விளாசினார்.

திறமையான வீரர்

திறமையான வீரர்

இதன் மூலம் இந்திய அணியில் இடம் கிடைத்தாலும், ஒருநாள் அணியின் பிளேயிங் லெவனில் ருத்துராஜ் இடம்பெறவில்லை. இதே போன்று டி20 கிரிக்கெட்டில் ருத்துராஜ்க்கு 9 போட்டியில் விளையாட வாய்ப்பி கிடைத்தாலும், அதில் அவர் ஒரு அரைசதம் தான் அடித்திருந்தார். இந்த நிலையில், காயம் காரணமாக ருத்துராஜ் பல்வேறு போட்டியில் விளையாடாமல் இருந்தார்.

அறிமுக வீரராக வாய்ப்பு

அறிமுக வீரராக வாய்ப்பு

தற்போது மீண்டும் உடல் தகுதி பெற்று இந்திய ஏ அணிக்காக விளையாடி சதம் எல்லாம் விளாசினார். இதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர்கள் இல்லாத நிலையில் ருத்துராஜ்க்கு வாய்ப்பு கிடைத்தது. எனினும் ருத்துராஜ் தொடக்க வீரராக இருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் அவருக்கு 3வது வீரராக தான் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதனால் ருத்துராஜ் கெய்க்வாட், புதிய இடத்தில் களமிறங்கினார். ஆடுகளம் தோய்வாக இருந்தது. மேலும் பந்து நன்றாக Turn ஆனது. மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர். இதனால் ஷிகர் தவான் 4 ரன்களிலும், சுப்மான் கில் 3 ரன்களிலும் வெளியேற, இந்திய அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

டெஸ்ட் இன்னிங்ஸ்

டெஸ்ட் இன்னிங்ஸ்

இதனையடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட் விழக்கூடாது என்பதால் நிதானமாக விளையாடினார். முதலில், ருத்துராஜின் நிலைபாடு சரியானது என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், ருத்துராஜ் அனைத்து பந்துவீச்சாளர்களையும் எதிர்கொள்ள திணறினார். 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 19 ரன்களை மட்டுமே எடுத்து, ஒரு பவுண்டரியை மட்டும் அடித்தார். இதனால் ருத்துராஜின் ஆட்டம் இந்தியாவுக்கு பெரிய மைனசாக அமைந்தது.

Story first published: Thursday, October 6, 2022, 22:28 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+