Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடுவரின் தவறான முடிவால் சதத்தை இழந்த ருதுராஜ்? என்ன நடந்தது? கடுப்பான ரசிகர்கள்

அகமதாபாத் : ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடரில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார். சிஎஸ்கே அடித்த ரன்களில் பாதிக்கு மேல் ருதுராஜ் தான் அடித்தார். 23 பந்துகளில் அரைசதத்தை கடந்த ருதுராஜ், நடப்பு சீசனில் முதல் அரைசதம் அடித்தவர் என்ற பெருமைய பெற்றார்.

ருதுராஜ் கெய்க்வாட் இன்றைய ஆட்டத்தில் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அல்சாரி ஜோசப் வீசிய பந்தை ருதுராஜ் கெய்க்வாட் துக்கி அடித்தார். ஆனால் அது கேட்ச் ஆனது, அல்சாரி ஜோசப் வீசிய பந்து, ஃபுல்டாசாக வந்தது.

Ruturaj gaikwat out or not out - Fans questions third umpire decision

இதனால், பந்து இடுப்புக்கு மேல் வந்ததா, இல்லை யா என்ற குழப்பம் ஏறபட்டது. இதனையடுத்து, களத்தில் இருந்த நடுவர் மூன்றாம் நடுவரின் உதவியை நாடினர். அப்போது பந்து இடுப்புக்கு மேல் சென்றது போல் ரிப்ளேவில் தெரிந்தது.

ஆனால், ஹாக் ஐயில் பார்க்கும் போது பந்து, இடுப்புக்கு கிழ் சென்றது போல் காட்டியது. இதனால் மூன்றாம் நடுவர் தவறு செய்துவிட்டதாக சிலர் குற்றஞ்சாட்டினார். ஆனால் ருதுராஜ் கொஞ்சம் உயரம் என்பதால், பந்த அவருடைய இடுப்புக்கு கீழ் தான் சென்றது. தில் எந்த தவறும் நிகழ வில்லை. இந்த இன்னிங்சில் ருத்ராஜ் 9 சிக்சர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 31, 2023, 21:45 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+