Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி, ரோகித் சர்மாவை எல்லாம் எங்களிடம் அனுப்புங்க! பிசிசிஐக்கு டிவில்லியர்ஸ் கோரிக்கை

மும்பை : ஐபிஎல் தொடர் பாணியில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா 20 தொடர் வரும் வியாழக்கிழமைகளில் இருந்து தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் பங்கேற்கிறார்.

இதன்மூலம் எஸ் ஏ 20 தொடரில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். பார்ல் ராயல்ஸ் அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாட இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிவில்லியர்ஸ் இந்தத் தொடரில் மேலும் பல இந்தியர்கள் விளையாட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

sa 20 ab devilliers bcci indian cricket team dinesh karthik


தினேஷ் கார்த்திக் இந்த வருடம் இந்த தொடரில் அறிமுகமாகிறார். இது உண்மையிலே நல்ல விஷயம். இது இந்த தொடருக்கும் மிகச் சிறந்ததாக இருக்கும். எதிர்காலத்தில் பல முக்கிய இந்திய வீரர்களை எங்கள் தொடரில் விளையாட அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படி நடந்தால் மேலும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவு பங்கேற்பதன் மூலம் இந்த தொடர் மேலும் வளரும். ஐபிஎல் தொடர் இவ்வளவு ஆண்டாக வெற்றிகரமாக இயங்குவதற்கு இது ஒரு காரணம். நான் 2008 ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடரை கவனித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு வீரர்களின் பலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் தலைசிறந்த வீரர்களும் இந்தியாவில் தலைசிறந்த வீரர்களும் இணையும் போது சிறந்த கிரிக்கெட் உருவாகிறது.

எனவே கிரேம் ஸ்மித் மற்றும் அவர்களுடைய குழு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வெளிநாட்டு வீரர்களை அதிக அளவு தேர்வு செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறும் வீரர்கள் தான் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்க பிசிசியை அனுமதி அளித்து இருக்கிறது. இதனால் உத்தப்பா,சுரேஷ் ரெய்னா போன்ற வீரர்கள் தற்போது வெளிநாடுகளில் டி20 போட்டிகளில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 8, 2025, 8:29 [IST]
Other articles published on Jan 8, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+