For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை இந்தியன்ஸ் CT கேப்டனாக ரஷித் கான் நியமனம்.. அம்பானி குடும்பம் எடுத்த அதிரடி முடிவு

வரும் SA20 சீசனில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியின் கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் சீசனில் அணியை வழிநடத்திய ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர், இரண்டாவது சீசனில் முதுகு காயத்தால் விலகிய பின்னர், மீண்டும் கேப்டன் பதவிக்குத் திரும்புகிறார். ரஷீத் தனது முதல் பதவிக் காலத்தில் சிறப்பாக செயல்பட்டார், குறைவான எக்கானமி வைத்திருக்கும் ரஷித் கான், ஒன்பது விக்கெட்டுகளைப் பெற்றார்.

ரஷீத் கானின் தலைமைத்துவம் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுனுக்கு பெரிதும் பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் கேப்டனாக இருந்த ரஷித் கான் தனது அனுபவம், திறனை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் ரஷித் கான் மும்பை கேப் டவுன் அணிக்கு முதல் SA20 கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷீத் திரும்புதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ள மும்பை அணி நிர்வாகம், உலகெங்கிலும் உள்ள பேட்ஸ்மேன்களை குழப்பும் அவரது தனித்துவமான பந்துவீச்சு பாணியையும், ஆப்கானிஸ்தானை கிரிக்கெட்டை உலக கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த பங்களிப்பையும் யாராலும் மறுக்க முடியாது. "ஆப்கானிஸ்தான் அணியின் சக்தியாக விளங்கும் ரஷித் கான், தனது மேஜிக் மூலம் தனியாளாக போட்டியை மாற்றும் நபர் என்று பாராட்டியுள்ளது. ரஷீத் கான் நடப்பு SA20 2025 தொடரில் பென் ஸ்டோக்ஸ், டிரென்ட் பவுல்ட் மற்றும் காகிசோ ரபாடா ஆகியோர் இடம்பெற்றுள்ள நட்சத்திரங்களால் நிறைந்த அணியை வழிநடத்துவார். ரஷீத் இல்லாத சீசன்களில், மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் போராடி, கடைசி இடத்தைப் பிடித்தது. இதனால் இழந்த பெருமையை மும்பை கேப் டவுன் அணி மீட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷீத் இல்லாத கடந்த ஆண்டு கீரன் பொல்லார்ட் கேப்டனாக பொறுப்பேற்றார்.ஆனால் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் கடைசி இடத்தில் முடிந்தது. இந்த சீசன் ரஷீத் தலைமையின் கீழ் மும்பை கேப் டவுன் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சவாலான சீசன்களுக்குப் பிறகு மும்பை தலைவிதியை ரஷித் மாற்றுவார் என ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மும்பை கேப் டவுன் விவரம் : கிறிஸ் பெஞ்சமின்*,டெவால்ட் ப்ரீவிஸ்* ,ரியான் ரிக்கல்டன், ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸென். கானர் எஸ்டெர்ஹூய்சென், டெலானோ போட்ஜிட்டர், ரீசா ஹென்ட்ரிக்ஸ், காலின் இன்கிராம். டிரிஸ்டன் லூஸ், பென் ஸ்டோக்ஸ்* ,அஸ்மத்துல்லா ஓமர்சாய்*, ஜார்ஜ் லிண்டே. கார்பின் போஷ், ரஷித் கான்* ,ககிசோ ரபாடா டிரெண்ட் பவுல்ட், நுவான துஷாரா, டெயின் பீடேல்ட்

Story first published: Friday, December 20, 2024, 16:21 [IST]
Other articles published on Dec 20, 2024
English summary
Rashid Khan has been reappointed as captain of Mumbai Indians Cape Town for the SA20 2025 season. His leadership is expected to boost the team’s chances of winning their first title after recent struggles.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+