Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை சந்திக்காமலே அவுட்..? முதல் போட்டியிலேயே ரிஷப் பண்ட்க்கு கண்டம்.. ஒரு சிறிய தவறு தான்

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கேப்டனாக முதல் முறையாக ரிஷப் பண்ட் களமிறங்கினார்.

முதல் போட்டியில் கேப்டனாக களமிறங்கும் போது பெரிய ரன் அடிக்க வேண்டும் என்று வீரர்களுக்கு ஆசை இருக்கத் தானே செய்யும்.

SA missed the run out chance for captain Rishabh pant

அதுவும் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்றால் கேட்கவா வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட்க்கு ஒரு பெரிய கண்டம் நிகழ்ந்தது.

இஷான் கிஷன் அவுட்டாகிய பிறகு ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் அவர் நாக் ஸ்ட்ரைக்கர் பக்கம் நின்றார். அப்போது ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த பந்தை பார்த்தவுடன் , பதற்றத்தில், ரன் ஓட ரிஷப் பண்ட் தொடங்கினார். அப்போது ரபாடா மீது ரிஷப் பண்ட் மோதினார்.

இதனையடுத்து ஸ்டப்ஸ் அந்த பந்தை எடுத்து ரன் அவுட் செய்ய முயன்றார். ஆனால் அது ஸ்டம்பை மிஸ் செய்தது. இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு ரிஷப் பண்ட் பத்திரமாக ரன் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதன் மூலம் கேப்டனாக பந்தை சந்திக்காமலேயே ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆகி இருப்பார்.

இதே போன்று 10.3வது ஓவரில் கேசவ் மகாராஜ் வீசிய பந்தை இறங்கி வந்து அடிக்க முயன்ற ஸ்ரேயாஸ் ஐயர் தேனை மிஸ் செய்தார். இதனையடுத்து அவர் ஸ்டம்ப் அவுட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குயின்டன் டி காக்கும் பந்தை பிடிக்க தவறியதால் அவருக்கு ஒரு லைஃப் கிடைத்தது.

Story first published: Thursday, June 9, 2022, 20:40 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+