Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs AUS: 102 ஆண்டுகளுக்கு பின் தென்னாப்பிரிக்க அணியில் வினோத சாதனை.. 19 வீரர்களுக்கு 30க்கும் மேல்

கெபேஹா: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 102 ஆண்டுகளுக்குப் பிறகு, தென்னாப்பிரிக்க அணி தனது ஆடும் லெவனில் 30 வயதைக் கடந்த 8 வீரர்களுடன் களமிறங்கி புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது ஆட்டம் கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதற்கு முன்பு கடந்த 1924-ம் ஆண்டில் மட்டுமே தென்னாப்பிரிக்க அணி 30 வயதுக்கு மேற்பட்ட 8 வீரர்களை ஒரே ஆட்டத்தில் களமிறக்கியிருந்தது.

இந்தப் போட்டியில் மழை காரணமாக முதல் நாளில் வெறும் 12.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. டாஸ் வென்று பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் அபாரமாகப் பந்துவீசி 2 விக்கெட்டுகளை அள்ளினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தொடக்கத்திலேயே பெரும் பின்னடைவைச் சந்தித்தது. டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் 214 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா, இந்த ஆட்டத்தில் 30 வயதான மார்கஸ் ஏக்கர்மேனுக்கு அறிமுக வாய்ப்பு அளித்தது. அவருடன் காகிசோ ரபாடா மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோரையும் சேர்த்தது.

SA vs AUS South Africa Field Eight Players Over 30 in Historic Test Match Against Australia After 102 Years

மறுபுறம், ஆஸ்திரேலிய அணியில் களமிறங்கிய 11 வீரர்களுமே 30 வயதைக் கடந்தவர்கள் என்பது இன்னும் மிகப்பெரிய ஆச்சரியமாகும். ஆஸ்திரேலிய அணியில் மிக இளம் வீரரான மேட் ரென்ஷாவுக்கே 30 வயதாகிறது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஸ்காட் போலண்ட் ஆகியோர் 37 வயதை எட்டியுள்ளனர். தென்னாப்பிரிக்க அணியில் 37 வயதான சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் அதிக வயதான வீரராகவும், 26 வயதான மார்கோ யான்சன் மட்டுமே அணியின் ஒரே இளம் வீரராகவும் களமிறங்கினர்.

"ஷமி இல்லைனா இந்தியா உலகக்கோப்பை பைனலே போயிருக்காது.. அவருக்கு இடமில்லையா?".. முகமது கைஃப் ஆவேசம்

இரு அணிகளையும் சேர்த்து களத்தில் நிற்கும் 22 வீரர்களில், 19 பேர் 30 வயதைக் கடந்த முதிர்ந்த வீரர்கள் ஆவர். இதற்கு முன்பு கடந்த 1926-ல் நாட்டிங்ஹாமில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மோதிய டெஸ்டில் 20 வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக களம் கண்டதே உலக சாதனையாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 100 ஆண்டுகளுக்குப் பிறகு அரங்கேறியுள்ள இந்த நிகழ்வு, கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு முன்னணி அணிகளும் அனுபவ வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் முக்கியத்துவம் அளித்து இருப்பது ஏன்? என்ற விவாதமும் தொடங்கி உள்ளது.

Also Read

"பும்ரா ஆடிய ஒரு நியூசிலாந்து டெஸ்ட்டில் கூட இந்தியா ஜெயித்ததே இல்லை ஆனால் சிராஜ்.." - டிம் சவுதி
Story first published: Monday, October 19, 2026, 10:34 [IST]
Other articles published on Oct 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+