Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

SA vs AUS: "இது ஆஸ்திரேலியா ஆடுற ஆட்டமே இல்ல.. வெட்கக்கேடான..".. ஆவேசமான டேவிட் வார்னர்

சிட்னி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்து தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, கடைசி இன்னிங்ஸில் எந்தவித போராட்டமும் இன்றி சீட்டுக்கட்டு போல சரிந்த ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் மிகக் கடுமையாக விளாசித் தள்ளியுள்ளார்.

கேப்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 288 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் ஓவரின் முதல் பந்திலேயே மேட் ரென்ஷாவை இழந்தது. அதே ஓவரில் மார்னஸ் லபுஷேனும் 4 ரன்களில் வெளியேறினார். முதல் செஷனிலேயே ஆஸ்திரேலியா 60 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. கேமரூன் கிரீன் 27 ரன்களும், நாதன் லயன் 33 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலியா வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

SA vs AUS Test David Warner Slams Australia Batters After Humiliating 3rd Test Loss to South Africa

இது குறித்து தொலைக்காட்சியில் கொந்தளித்துப் பேசிய டேவிட் வார்னர், "எனக்கு மிகுந்த ஏமாற்றமாகவும் கோபமாகவும் இருக்கிறது. இது மிகவும் மோசமானது. இது ஆஸ்திரேலிய அணி விளையாடும் விதமே கிடையாது. ஆட்டத்தில் துளியும் போராடும் குணமே இல்லை. மிக வெட்கக்கேடான ஆட்டம் இது. 288 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் வெற்றியோடு தொடரையும் கைப்பற்றி இருக்கலாம். தொடரே பணயத்தில் இருக்கும்போது இப்படித்தான் பொறுப்பற்ற முறையில் ஆடுவதா?" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தத் தொடர் முழுவதும் பேட்டர்கள் பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து கைவிட்டுவிட்டனர். முதல் டெஸ்டில் மேட் ரென்ஷா போராடினார். ஆனால் ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் பேட்டர்களின் செயல்பாடு மிகவும் மோசமானது மற்றும் அவமானகரமானது" என்று ஆவேசப்பட்டார் டேவிட் வார்னர்.

12 மேட்ச், பேட்டிங் ஆவரேஜ் 17.. மூன்றாம் வரிசை வீரரால் இந்திய அணிக்கு புதிய தலைவலி.. SENA சொதப்பல்

12 மேட்ச், பேட்டிங் ஆவரேஜ் 17.. மூன்றாம் வரிசை வீரரால் இந்திய அணிக்கு புதிய தலைவலி.. SENA சொதப்பல்

முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, அடுத்த 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்காவிடம் வரிசையாகத் தோற்று கோப்பையை நழுவவிட்டுள்ளது. அது மட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தை தென்னாப்பிரிக்காவிடம் இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலிலும் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

Story first published: Sunday, November 1, 2026, 8:29 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+