For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SA20: ஒரே ஓவரில் மும்பை இந்தியன்ஸை காலி செய்த சிஎஸ்கே தம்பி ஜேஎஸ்கே.. 10வது ஓவரில் நடந்த ட்விஸ்ட்

ஜோஹன்னஸ்பெர்க்: மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை அணியான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 எனும் டி20 லீக் தொடரில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிகளுக்கு இடையே ஆன போட்டி நடைபெற்றது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். அதே போலவே, இந்தப் போட்டியிலும் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு அணிகளும் சரி சமமாக போட்டியிட்டன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி மோசமாக ஆடியது. 30 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அதன் பின் ஆறாம் வரிசையில் இறங்கிய ஜார்ஜ் லின்டே 35 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். எட்டாம் வரிசையில் இறங்கிய டிலானோ போட்ஜீடர் 22 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார்.

sa20 2025 joburg super kings mumbai indians cape town 20 2025

இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சேஸிங் செய்தது. துவக்க வீரர் டெவான் கான்வே ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஃபாஃப் டூ பிளஸிஸ் 23 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின் டூ பிளாய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆடி வந்தனர். அப்போது மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது. மழை மீண்டும் வரும் வாய்ப்பு இருந்ததால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழக்காமல் விரைவாக ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

அப்போது பத்தாவது ஓவரில் அந்த அணி 15 ரன்கள் சேர்த்தது திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் டூ பிளாய் ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். ஜானி பேர்ஸ்டோ ஒரு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் கிடைத்தது. 11 வது ஓவரிலும் 8 ரன்கள் சேர்த்தது அந்த ஜோடி.

12வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஜானி பேர்ஸ்டோ 14 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அடுத்து மழையால் போட்டி மீண்டும் தடைப்பட்டது. பேர்ஸ்டோ விக்கெட் வீழ்ந்ததால் ஜோபர்க் அணி டிஎல்எஸ் முறையில் பின்தங்கி இருக்குமோ என்ற அச்சம் இருந்தது.

ஆனால், டிஎல்எஸ் முறையில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சிறிய முன்னிலையை பெற்று இருந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்ததை அடுத்து போட்டி அத்துடன் கைவிடப்பட்டு, முடிவு வெளியானது. ஆறு ரன்கள் வித்தியாசத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

SA20: வரலாறு படைத்த தினேஷ் கார்த்திக்.. வேறு எந்த இந்திய வீரரும் செய்யாததை செய்து காட்டினார்

பத்தாவது ஓவரில் ஜோபர்க் அணி 15 ரன்கள் சேர்த்தது மிகப் பெரிய திருப்புனையாக அமைந்தது. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி இந்த சீசனில் தனது முதல் தோல்வியை பதிவு செய்தது. ஜோபர்க் அணி தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று இருக்கிறது.

Story first published: Sunday, January 12, 2025, 10:07 [IST]
Other articles published on Jan 12, 2025
English summary
SA20 2025: Joburg Super Kings beat Mumbai Indians Cape Town by 6 runs in dls method
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+