Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர கூட்டிட்டு வாங்கப்பா” பும்ராவுக்கு மாற்றாக இந்திய சீனியர் கூறிய வீரர்.. முகமது ஷமி இல்லை!!

மும்பை: இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்றாக முகமது ஷமி வேண்டாம் என முன்னாள் தேர்வுக்குழு அதிகாரி சாபா கரீம் பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பும்ராவுக்கு மாற்று வீரர்

பும்ராவுக்கு மாற்று வீரர்

இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராக யார் இருப்பார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவின் முன்னணி வீரர்களான முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சஹார் உள்ளிட்டோர் அந்த ஒரு இடத்திற்காக போட்டிப்போட்டு வருகின்றனர். இதில் சீனியர் வீரர் ஷமி தான் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

சாபா கரீப் அறிவுரை

சாபா கரீப் அறிவுரை

இந்நிலையில் அப்படி செய்யக்கூடாது என சாபா கரீம் பேசியுள்ளார். அதில், ஜஸ்பிரித் பும்ரா இல்லையென்றால் தீபக் சஹாரை தான் நீங்கள் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் அவர் தான் பேக் அப் லிஸ்டில் உள்ளார். உலகக்கோப்பை போன்ற பெரும் தொடர்களில் சஹார் போன்று அழுத்தத்தை தாங்கக்கூடிய வீரரும் தேவை.

முக்கிய விஷயம்

முக்கிய விஷயம்

முகமது ஷமி கடந்த ஒரு வருடமாக இந்தியாவுக்காக ஒரு டி20 போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் தீபக் சஹார் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார். எனவே அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார், ஹர்ஷல் பட்டேல் கூட்டணி பார்க்க சிறப்பாக இருக்கும் என சாபா கரீம் பேசியுள்ளார்.

தீபக் சஹார் சிறப்பு

தீபக் சஹார் சிறப்பு

டி20 உலகக்கோப்பை தொடரில் பேக் அப் வீரராக தீபக் சஹார் இருக்கிறார். பவர் ப்ளே ஸ்பெஷலிஸ்ட்டான தீபக் சஹார் டி20 கிரிக்கெட்டில் சிறந்த பவுலராக திகழ்கிறார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் தோனியுடன் விளையாடிய அனுபவம் அவருக்கு நிறைய உள்ளது. லோயர் ஆர்டரில் பேட்டிங்கிற்கும் உதவுவார் என்பதால் பும்ராவுக்கு மாற்றாக தீபக் சஹார் இருக்கலாம்.

Story first published: Friday, September 30, 2022, 19:30 [IST]
Other articles published on Sep 30, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+