For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியை பொதுவாக பாராட்டி.. கோலிக்கு அட்வைஸ் சொன்ன சச்சின்.. என்ன இருக்கு அந்த வீடியோவில்?

மும்பை: 2011ம் ஆண்டின் உலக கோப்பை வென்றதன் 8வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சச்சின் டெண்டுல்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தோனி தலைமையிலான இந்திய அணி 2011ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் பெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது. கிரிக்கெட் ஜாம்பவன் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 1992, 1996, 1999, 2003, 2007ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலககோப்பையில் விளையாடினார்.

ஆனால், 2011ம் ஆண்டு உலக கோப்பையில்தான் இந்திய அணி வெற்றி பெற்றது. உலக கோப்பை வெல்லும் இந்திய அணியில் நான் இருக்க வேண்டும் என்பதே சச்சினின் வாழ்நாள் கனவாக இருந்தது. ஏப்ரல் 2, 2011 மறக்க முடியாத நாளாக அவருக்கு அமைந்தது.

இப்படி பண்ணிட்டீங்களே கோபால்.. கோலி, டி வில்லியர்ஸ் பலவீனத்தை வைத்து சாதித்த ராஜஸ்தான் வீரர்!! இப்படி பண்ணிட்டீங்களே கோபால்.. கோலி, டி வில்லியர்ஸ் பலவீனத்தை வைத்து சாதித்த ராஜஸ்தான் வீரர்!!

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

அந்த மகிழ்ச்சி குறித்து, சச்சின் டெண்டுல்கர் "என் கிரிக்கெட் வாழ்நாளில் சிறந்த தருணம்'' என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது கிரிக்கெட் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் நானும் இருந்தேன் என்பது சந்தோஷமாக உள்ளது. விரைவில் உலக கோப்பை கிரிக்கெட் 2019 தொடங்க உள்ளது.

பிசிசிஐ லோகோ

பிசிசிஐ லோகோ

இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இம்முறை நாம் ஜெயிக்க வேண்டும். இந்திய அணியின் ஜெர்சியை கவனித்து இருந்தால் பிசிசிஐ லோகோவிற்கு மேல் 3 ஸ்டார்ஸ் இருக்கும்.

4 ஸ்டாராக வேண்டும்

அந்த ஸ்டார்ஸ் நாம் எத்தனை முறை உலக கோப்பையை வென்று இருக்கிறோம் என்பதை குறிக்கும். இதுவரை 3 ஸ்டார்ஸ் ஜெர்சியில் உள்ளது. அதனை 4 ஸ்டார்களாக மாற்ற வேண்டும். அதுவே எனது ஆசை என்றும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 3, 2019, 11:31 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
Sachin Tendulkar asked Virat Kohli's World Cup team that Want to see four stars on India shirt.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X