Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் லக்ஷ்மனுக்கு பவுன்சர் வீசிய சச்சின்.. அமைதியாக வேடிக்கை பார்த்த தோனி.. எப்ப தெரியுமா?

மும்பை : இந்தியாவின் முன்னாள் மனநல ஆலோசகராக இருந்த பேடி அப்டன் ட்விட்டரில் ஒரு அரிய வீடியோவை வெளியிட்டார்.

தான் இந்திய அணியில் பணிபுரிந்த காலத்தில் எடுத்த வீடியோவைத்தான் வெளியிட்டார். அதில் இடம் பெற்றிருந்த காட்சி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்றது.

சச்சின் அளித்த பயிற்சி

சச்சின் அளித்த பயிற்சி

2008 டிசம்பர் மாதம், சென்னையில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக உடைமாற்றும் அறையில், விவிஎஸ் லக்ஷ்மனுக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அதிரடி பவுன்சர் பந்துவீச்சை எதிர்கொள்ள பயிற்சி அளித்தார் சச்சின்.

பவுன்சர் பயிற்சி

டென்னிஸ் பந்தில் தானே பவுன்சர் பந்துகளை வீசினார் சச்சின். விவிஎஸ் லக்ஷ்மன் அந்த பந்துகளை எதிர் கொள்ளாமல் தப்பித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நடுவே தோனி அமைதியாக அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.

மலரும் நினைவுகள்

மலரும் நினைவுகள்

இந்த வீடியோ வெறும் எட்டு நொடிகளே ஓடுகின்றன. எனினும், அதற்குள் கிரிக்கெட் ரசிகர்களின் மலரும் நினைவுகளை தூண்டி, அந்த காலகட்டத்துக்கே செல்ல வைத்தது. சச்சின், லக்ஷ்மன், டிராவிட் என ஜாம்பவான்கள் இந்திய டெஸ்ட் அணியில் கலக்கிய காலம் அது.

தொடரில் வெற்றி

தொடரில் வெற்றி

சச்சின் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள பயிற்சி அளித்தாலும், அந்த டெஸ்ட் தொடரில் லக்ஷ்மன் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. எனினும், இந்தியா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

Story first published: Friday, May 17, 2019, 17:42 [IST]
Other articles published on May 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+