கங்குலி சட்டையைக் கழற்றிப் போட்டதை சச்சின் ரசிக்கலையே.. சுக்லா
மும்பை: லார்ட்ஸ் மைதானத்தில் 2002ம் ஆண்டு இந்தியா நேட்வெஸ்ட் கோப்பையை வென்ற உற்சாகத்தில் அப்போது கேப்டனாக இருந்த சவுரவ் கங்குலி சட்டையைக் கழற்றி கையில் பிடித்து சுற்றியதை சச்சின் டெண்டுல்கர் ரசிக்கவில்லை, விரும்பவில்லை என்று ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யும், சச்சினுக்கு எம்.பி பதவி கிடைக்க நடுவராக இருந்தவரும், இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா சச்சின் குறித்த சுவாரஸ்ய சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார்.
சச்சினுக்கு எம்.பி பதவி கிடைக்க சோனியாதான் காரணம், அதுதொடர்பாக நான்தான் சச்சினிடம் பேசி சம்மதம் வாங்கினேன் என்று கூறியிருந்தார் சுக்லா.
இந்த நிலையில், கங்குலி குறித்த ஒரு விஷயத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

2002ல் என்ன நடந்துச்சுன்னா...?
2002ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த நேட்வெஸ்ட் டிராபி போட்டியின்போது இந்தியா வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அப்போது கேப்டனாக இருந்தவர் கங்குலி.

326 ரன்களை விரட்டி வென்றனர்
326 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டி இந்தியா அபாரமாக வென்றது அப்போட்டியில். லார்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடந்தது.

சல்மானாக மாறிய கங்குலி
இந்தியா வெற்றி பெற்றதும் உற்சாகமாகிப் போன கங்குலி, தான் போட்டிருந்த சட்டையைக் கழற்றி கையில் பிடித்து ஆட்டியபடி பால்கனியில் நின்றபடி உற்சாகமாகவும், ஆவேசமாகவும் குரல் எழுப்பினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

பிளின்டாப்புக்குக் கொடுத்த பதிலடி
இதற்குக் காரணம், அதற்கு முன்பு மும்பையில் நடந்த ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தபோது இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப் இதேபோலத்தான் சட்டையைக் கழற்றி சவுண்டு விட்டார். அதற்குப் பதிலடியாக இப்படிச் செய்தார் கங்குலி.

சச்சின் விரும்பவில்லை
இதுகுறித்து சுக்லா நினைவு கூர்கையில், தனது அணியினர் அனைவருமே இப்படி சட்டையைக் கழற்றி ஆட்டுமாறு கங்குலி விரும்பினார். ஆனால் சச்சின் அதை விரும்பவில்லை. அப்போது அவருக்கு அருகில் நின்றிருந்த என்னிடம், இப்படிச் செய்யக் கூடாது. இது ஜென்டில்மேன் ஆட்டம். கங்குலி விரும்பினால் செய்து விட்டுப் போகட்டும் என்று முனுமுனுத்தார்.
இப்படி கங்குலியைப் போட்டுக் கொடுத்திட்டியே பரட்டை...!


Click it and Unblock the Notifications