Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கள் 'தலையை' யாருன்னா கேட்டீங்க..! ஷரபோவா பேஸ்புக்கில் திட்டி தீர்த்த சச்சின் ரசிகர்கள்

டெல்லி: சச்சின் டெண்டுல்கரை தெரியாது என்று கூறிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா பேஸ்புக் பக்கத்தில் புகுந்து, சச்சின் ரசிகர்கள் மோசமாக கலாய்த்துவருகின்றனர். இதனால் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறார் ஷரபோவா.

சச்சின் டெண்டுல்கர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை பெரும்பாலும் நேரில் சென்று ரசிக்கக் கூடியவர். கடந்த சனிக்கிழமை ராயல் பாக்ஸில் சச்சின், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

சச்சினா அப்படீன்னா..?

சச்சினா அப்படீன்னா..?

ஆட்டம் முடிந்தவுடன் மரியா ஷரபோவாவிடம் பத்திரிகையாளர் ஒருவர், டேவிட் பெக்காமுடன் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர் என்றும் அவரைத் தெரியுமா என்றும் கேட்டுள்ளார் அதற்கு ஷரபோவா ‘எனக்குத் தெரியாது' என்று பதில் அளித்தார்.

பெக்காம் தெரியும்!

பெக்காம் தெரியும்!

அதே நேரம், டேவிட் பெக்காம் பற்றி கூறுகையில், அவரை இரு முறை சந்தித்திருப்பதாகவும், மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்றும், நாங்கள் சிறந்த நண்பர்கள் இல்லைதான், ஆனால் அவர் நல்ல மனிதர் என்பது எனக்குத் தெரியும் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் கங்கணம்

ரசிகர்கள் கங்கணம்

இந்த தகவல் இந்திய மீடியாக்களில் வெளியானதும் ரசிகர்கள் கொந்தளித்தனர். மீடியாக்களின் கமெண்ட்ஸ் பகுதிகளில்கூட ஷரபோவாவுக்கு எதிராக தங்கள் ஆத்திரத்தை கொட்டி தீர்த்தனர். மேலும், சச்சின் யார் என்பதை ஷரபோவாவுக்கு தெரியப்படுத்துவது என்று கங்கணம் கட்டிக்கொண்டனர்.

மோசமான விமர்சனங்கள்

மோசமான விமர்சனங்கள்

இதையடுத்து மரியா ஷரபோவா பேஸ்புக் பக்கத்திற்கு சென்று, அவர் ஷேர் செய்து வைத்துள்ள புகைப்படங்களுக்கு கீழே, சச்சின்... சச்சின்.. என்று டைப் அடித்துவிட்டனர். அத்தோடு விட்டார்களா, "நீ வெள்ளைத்தோலோடு இருப்பதால்தான் இப்படி சொல்கிறாயா", "தினசரி செய்தித்தாளில் விளையாட்டு பக்கத்தை நீ பார்த்தது கிடையாதா", "ரஷ்ய முட்டாளே" என்கிற ரேஞ்சில் திட்டவும் ஆரம்பித்துவிட்டனர். பல மாதங்களுக்கு முன்பாக ஷேர் செய்துள்ள போட்டோக்களிலும் இந்திய ரசிகர்கள் அதகளம் செய்துவிட்டார்கள்.

வெறுத்துப்போன ஷரபோவா

வெறுத்துப்போன ஷரபோவா

சிலர் வீக்கிபீடியாவிலுள்ள சச்சின் குறித்த விவரங்களை காப்பி-பேஸ்ட் செய்து வைத்துள்ளனர். பேக்புக் பக்கத்தை திறந்தாலே மரியா ஷரபோவா கண்களில் சச்சின் டெண்டுல்கர் என்ற வார்த்தைதான் கண்ணில் பட்டுக்கொண்டுள்ளது. வெறுத்துப்போயுள்ளார் ஷரபோவா.

சமூக வலைத்தளங்களில்

சமூக வலைத்தளங்களில்

தங்களது டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஷரபோவா குறித்து இந்தியர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். எனக்கு ஷரபோவாவை யார் என்று தெரியாது என்ற பெயரில் டிவிட்டரில் டிரெண்ட் விட்டுள்ளனர் இந்தியர்கள்.

Story first published: Thursday, July 3, 2014, 15:02 [IST]
Other articles published on Jul 3, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+