வாழ்க்கை ஸ்டெம்புகளுக்கு.. இல்ல பஸ் படிக்கட்டுக்கு நடுவில இருக்கலாம்.. ரஜினிக்கே பஞ்ச் வைத்த வீரர்
மும்பை:கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், கடந்தாண்டு ஐபிஎல் போட்டிகளிலிருந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இதன் காரணமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவிட்டு வருகிறார்.

அவரின் பதிவை படித்து ரசிப்பதற்கு என்றே ரசிகர்கள் பலர் உள்ளனர். தமிழ் சினிமாக்களில் வரும் பஞ்ச் டயலாக்குகள் போல.. அவர் போடும் பதிவுகள் சமூக வலைதளங்களில் ஏக வைரல்.
இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:
வாழ்க்கையின் தொடக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் இரண்டு ஸ்டம்புகளுக்கு நடுவில் இருக்கலாம் அல்லது ஒரு பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளுக்கு நடுவிலும் இருக்கலாம்.
எங்க தொடங்குறோம்ன்றதுல இல்ல மாஸு, எப்படி சாதிக்கிறோம்ங்கிறது தான் மாஸ் என்று அதில் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications