Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோல் மாடல் யார்..? எப்போது ரிட்டயர்டு ஆவேன்...? கோலி வெளியிட்ட பரபரப்பு தகவல்

Recommended Video

virat kohli about Retires : ஒய்வு பற்றி கோலி வெளியிட்ட பரபரப்பு தகவல் - வீடியோ

வாஷிங்டன்: கிரிக்கெட்டில் சச்சின் தான் எனது ரோல் மாடல், அவரை பின்பற்றியே எனது கிரிக்கெட் வாழ்வை முடிப்பேன் என்று கேப்டன் கோலி கூறியிருக்கிறார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதனை தொடர்ந்து கேப்டன் விராட் கோலிக்கும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கும் பிளவு ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின.

இது ஒருபுறம் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக இந்திய அணி அமெரிக்கா பறந்திருக்கிறது. போகும்முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் இந்த ரோகித் சண்டை, அணியில் பிளவு ஆகிய செய்திகளை மறுத்தனர்.

குரல்கள் எழும்பின

குரல்கள் எழும்பின

கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் கோலி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கோலி மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

ரோல் மாடல் யார்?

ரோல் மாடல் யார்?

இந்நிலையில் கோலி தனது ரோல் மாடல் யார் என்பது குறித்து வெளியிட்ட தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கோலி குறிப்பிட்டு இருப்பதாவது: கிரிக்கெட்டில் எனது சூப்பர் ஹீரோ சச்சின் தான்.

அவர் தான் ஹீரோ

அவர் தான் ஹீரோ

அவர் எப்பொழுதும் எனது ஹீரோ. என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் மீதி நாட்களில் அவர் தான் எனக்கு ஹீரோ. எத்தனையோ வீரர்கள் வந்தாலும் போனாலும் சச்சின் செய்த சாதனைகளை எவராலும் ஈடு செய்ய முடியாது.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

என்னுடைய கிரிக்கெட்டின் எஞ்சிய நாட்களிலும் அவரையே பின்தொடர்ந்து நான் முடிக்க விரும்புகிறேன் என்றார். தமது ரோல் மாடல் யார்? கிரிக்கெட் வாழ்க்கை எப்போது முடியும் என்பது பற்றி கோலி கூறிய இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

Story first published: Wednesday, July 31, 2019, 12:12 [IST]
Other articles published on Jul 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+