உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் யார் சச்சினா, கோலியா..? சர்ப்ரைஸ் தந்த லாரா
லண்டன்: கிரிக்கெட் உலகில் கோலியை விட சச்சின் தான் சிறந்தவர் என்று ஜாம்பவான் லாரா கூறியிருக்கிறார்.
விளையாட்டு உலகில் முன்னாள் வீரர்கள் நிகழ்த்திய சாதனைகளை நடப்பு வீரர்கள் முறியடித்துக் கொண்டே வருவது இயல்பான ஒன்று. அது போன்ற தருணத்தில் யார் சிறந்தவர் என்கின்ற விவாதம் ஒவ்வொரு காலகட்டத்திலும் எழும்.
அதேபோல் தற்போது கிரிக்கெட் உலகின் கடவுள் என அழைக்கப்பட்டு வருகின்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி நெருங்கி வருகிறார். விரைவில் முறியடிப்பார் என்கின்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

யார் பெஸ்ட்?
அதன் காரணமாக, சில ஆண்டுகளாகவே சச்சின், கோலி யார் சிறந்தவர் என்கின்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர். சில ஆண்டுகளாகவே, கிரிக்கெட் உலகில் இந்த 2 பேரில் சிறந்தவர் யார் என்ற கேள்விகள் உலா வரத் தொடங்கி உள்ளன. முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள், கேப்டன்கள் என பலரும் கருத்துகளை கூறி வருகின்றனர்.

சச்சினுக்கு ஆதரவு
அந்த வரிசையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாராவும் இணைந்துள்ளார். அவரது காலத்தில் களத்தில் இருந்த சச்சினுக்கு தான் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். சச்சின் தான் சிறந்த வீரர் என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

விளக்கம்
சச்சினுக்கு ஆதரவளித்தத்தோடு மட்டுமல்லாமல், கோலியும் தற்போதைய கிரிக்கெட் உலகின் சிறந்தவர் என்பதை கூறியிருக்கிறார். ஏன் சச்சினை தேர்வு செய்தேன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

20 ஆண்டுகாலம்
சச்சின் 24 ஆண்டுகாலம் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 ஆண்டுகாலத்தை தன் கைக்குள் கொண்டிருந்தார். நவீன தொழில்நுட்ப வசதி இல்லாத அன்றைய கால கட்டத்தில் வேகபந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொண்டிருக்கிறார். 200 டெஸ்ட் போட்டிகளை ஆடுவது என்பது சாதாரண ஒன்றல்ல. அதற்காக தான் சச்சினை ஆதரிக்கிறேன்.

நெருங்குவது எளிதல்ல
கோலி 3 வித போட்டிகளிலும் முதன்மை வாய்ந்தவர். இன்றைய காலகட்டத்தில் எனது ஆதரவு கோலிக்கு தான். மற்ற வீரர்கள் ரன்கள் குவித்தாலும், கோலியை நெருங்கியது எளிதல்ல என்றார்.


Click it and Unblock the Notifications