நாட்டின் நம்பர் ஒன் பணக்கார கிரிக்கெட் வீரர் சச்சின், டோணிக்கு 2வது இடம்
மும்பை: சச்சின் டெண்டுல்கர் தான் நம் நாட்டிலேயே பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார்.
வெல்த் எக்ஸ் நிறுவனம் நம் நாட்டின் கிரிக்கெட் வீரர்களின் சொத்து மதிப்பை கணக்கிட்டு அதன் அடிப்படையில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் முதல் 5 இடங்களில் சச்சின் டெண்டுல்கர், டோணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த மாதத்தோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சின் தான் நாட்டின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஆகும்.

முதலிடத்தில் சச்சின்
இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ரூ. 992 கோடி சொத்துக்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

டோணி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி ரூ. 310 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் இரண்டாவது பணக்கார வீரராக உள்ளார்.

யுவராஜ் சிங்
பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 186 கோடி ஆகும்.

டிராவிட்
ராகுல் டிராவிட் நாட்டின் நான்காவது பணக்கார கிரிக்கெட் வீரர் ஆவார். அவரிடம் ரூ. 124 கோடி சொத்துக்கள் உள்ளன.

கோஹ்லி
விராத் கோஹ்லி ரூ.93 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் பணக்கார வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications