Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதை மட்டும் பண்ணவே மாட்டேன்.. அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியம்.. கடைசி வரை மீறாத சச்சின்!

மும்பை : சச்சின் டெண்டுல்கர் தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் ஒன்றை கடைசி வரை காப்பாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட பொருட்களின் விளம்பரங்களை தான் ஒரு கிரிக்கெட் வீரராக ஆதரிக்க மாட்டேன் என தந்தையிடம் சத்தியம் செய்து கொடுத்துள்ளார் சச்சின்.

ஒப்புக் கொள்ளவில்லை

ஒப்புக் கொள்ளவில்லை

மற்ற கிரிக்கெட் வீரர்கள் அந்த விளம்பரங்களில் நடித்து, தங்கள் பேட்டில் அதை பிராண்டிங் செய்ய ஒப்புக் கொண்டாலும் சச்சின் கடைசி வரை அதை ஒப்புக் கொள்ளவில்லை. இது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் சச்சின் பேசி உள்ளார்.

தனி மரியாதை

தனி மரியாதை

சச்சின் டெண்டுல்கர் மிகப் பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் அவருக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் மீது தனி மரியாதை உள்ளது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.

அந்த பொருட்களை ஆதரிக்கவில்லை

அந்த பொருட்களை ஆதரிக்கவில்லை

சச்சின் டெண்டுல்கர் கடைசி வரை புகையிலை, மதுபான விளம்பரங்களில் நடிக்கவில்லை. அந்த பொருட்களை ஆதரிக்கவும் இல்லை. இது பற்றி சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்டியில் தான் ஏன் அவற்றை ஆதரிக்கவில்லை என விரிவாக கூறி உள்ளார்.

சத்தியம் செய்து கொடுத்தேன்

சத்தியம் செய்து கொடுத்தேன்

"நான் என் தந்தைக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்தேன். நான் ஒரு முன்னுதாரணம், நிறைய பேர் என்னை பின்பற்றுவார்கள் என அவர் கூறினார். அதனால் தான் எப்போதும் புகையிலை மற்றும் மதுபான பொருட்களை ஆதரிக்கவில்லை" என்றார் சச்சின்.

விளம்பரம் செய்தார்கள்

விளம்பரம் செய்தார்கள்

"90களில் என் பேட்டில் அந்த ஸ்டிக்கர்கள் இல்லை. அவை தொடர்பான ஒப்பந்தங்களும் செய்யவில்லை. ஆனால், அணியில் இருந்த அனைவரும் குறிப்பாக இரண்டு பிராண்ட்களை விளம்பரம் செய்தார்கள் - வில்ஸ் மற்றும் ஃபோர் ஸ்கொயர்." என்றார் சச்சின்.

சத்தியத்தை மீறவில்லை

சத்தியத்தை மீறவில்லை

"இந்த பொருட்களை நான் விளம்பரம் செய்யாமல் இருந்தேன். அதன் மூலம் நான் என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறவில்லை. அவர்களிடம் இருந்து எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. அவர்கள் பிராண்டை நான் ஆதரித்து என் பேட்டில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளுமாறு கேட்டார்கள். நான் அதை விளம்பரம் செய்யவில்லை" என்றார் சச்சின்.

விலகி இருந்தேன்

விலகி இருந்தேன்

மேலும், "அந்த இரண்டு பொருட்களிடம் இருந்து நான் விலகி இருந்தேன். என் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைசி வரை மீறவில்லை." என்றார் சச்சின். அவரது ரசிகர்கள் இது குறித்து பெருமைப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் குறித்து பேசிய சச்சின் தான் நீண்ட நாட்களாக நோயில் இருந்து பாதுகாக்க அழுக்கான கைகளை கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக கூறினார். மேலும், சுகாதார அமைச்சகம் கூறும் விதி முறைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.

Story first published: Sunday, June 14, 2020, 13:20 [IST]
Other articles published on Jun 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+