2008இல் ப்ரித்வி ஷாவை பார்த்து சச்சின் சொன்ன வார்த்தைகள்.. இன்று கண் முன்னே நடக்கிறது
Recommended Video

ராஜ்கோட் : இன்று நடந்த இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா அடித்த சதம்தான் பெரிய செய்தியாக உள்ளது.
18 வயதே ஆன, மீசை கூட முழுதாக முளைக்காத சிறுவன் ப்ரித்வி ஷா வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை விளாசி தள்ளினார்.
சச்சின் இவரை பத்து வருடங்கள் முன்பே பார்த்து அறிவுரை வழங்கியதோடு, இவர் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பார் என கணித்துள்ளார்.

சச்சின் வழியில்
சச்சின் எப்படி தன் பதின்ம வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தாரோ, அதே போல பதினெட்டு வயதில் தன் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடி இருக்கிறார், ப்ரித்வி ஷா. இன்று தன் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த அவர் பல சாதனைகளை செய்தார்.

ப்ரித்வி ஷா சாதனைகள்
இந்தியாவில் இளம் வயதில் சதம் அடித்தவர்களில் சச்சினுக்கு அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதே போல தன் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 15வது இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் இவர்.
[சச்சின், கங்குலி வழியில் ப்ரித்வி ஷா.. அறிமுக போட்டியில் இருந்தே சாதனைகள் ஆரம்பம்]

எட்டு வயதில் பார்த்த சச்சின்
ப்ரித்வி ஷாவை எட்டு வயதாக இற்கும் போதே பார்த்திருக்கிறார் சச்சின். அவரது ஆட்டத்திறனை அப்போதே பார்த்த சச்சின், "எதிர்கால இந்திய கிரிக்கெட் வீரர்" என கணித்துள்ளார். சுமார் பத்து வருடம் கழித்து, அவரது கணிப்பு உண்மையாகி இருக்கிறது. இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக களம் இறங்கி சதம் அடித்து கலக்கியுள்ளார் ப்ரித்வி ஷா.

சச்சின் கணிப்பு என்ன?
சச்சின் பத்து வருடம் முன்பு ப்ரித்வி ஷாவை பார்த்து, அவருக்கு ஆட்டத்தில் சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதே போல, ப்ரித்வி ஷா பேட்டை பிடிக்கும் முறை, அடிக்கும் ஷாட்கள் உள்ளிட்ட திறன்களை கண்ட சச்சின், அவரது தனிப்பட்ட ஆட்ட முறையை எந்த பயிற்சியாளர் கூறினாலும் மாற்ற வேண்டாம், ஒருவேளை மாற்றுமாறு கூறினால் அவர்களை என்னிடம் பேசச் சொல் என கூறி இருக்கிறார். அப்போதே சச்சின், "ப்ரித்வி ஷா எதிர்கால இந்திய அணி வீரர்" என கூறி இருக்கிறார். தற்போது இது உண்மையாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications