For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின், கங்குலி வழியில் ப்ரித்வி ஷா.. அறிமுக போட்டியில் இருந்தே சாதனைகள் ஆரம்பம்

Recommended Video

அறிமுக போட்டியில் சதம் அடித்த ப்ரித்வி ஷா.. புதிய சாதனை..வீடியோ

ராஜ்கோட் : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் போட்டி அக்டோபர் 4 முதல் தொடங்கியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இளம் வீரர் ப்ரித்வி ஷா சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

இன்று தொடங்கிய முதல் டெஸ்டில் இந்திய அணியில் துவக்க வீரராக இடம் பிடித்தார் ப்ரித்வி ஷா.

அறிமுக போட்டியில் சதம் அடித்த ப்ரித்வி ஷா.. புதிய சாதனை.. வெ.இண்டீஸ் தடுமாற்றம் <br>]அறிமுக போட்டியில் சதம் அடித்த ப்ரித்வி ஷா.. புதிய சாதனை.. வெ.இண்டீஸ் தடுமாற்றம்
]

தேர்ந்த ஷாட்கள்

தன் முதல் போட்டி என்றோ, தன்னை விட மற்ற வீரர்கள் அனைவரும் வயதில் மூத்தவர்கள் என்றோ யோசிக்காத ப்ரித்வி ஷா, முதல் பந்து முதல் கம்பீரமாக ஆடினார். மிக தேர்ந்த ஷாட்களாக ஆடிய ப்ரித்வி ஷா, பல முறை சச்சினை நினைவு படுத்தினார். தன் இயல்பான ஆட்டத்தை ஆடிய அவர் தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து வந்தார். ஒருநாள் போட்டிகள் போல ஆடிய அவர் 99 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார். அதில் 15 பவுண்டரிகள் அடங்கும்.

சாதனை என்ன?

சாதனை என்ன?

சச்சின் தான் இந்தியாவில் மிக குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர், சச்சின் தன் 17 வயது, 107வது நாளில் முதல் சதம் அடித்தார். அந்த நிகழ்வு 1990ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்தது. அதன் பின் இரண்டாவது இளம் வீரராக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த பெருமையை பெற்றுள்ளார் ப்ரித்வி ஷா. இவர் 18 வயது 329வது நாளில் தன் முதல் போட்டியில் சதம் அடித்துள்ளார். குறைந்த வயதில் சதம் அடித்தவர்கள் பட்டியலில் உலக அளவில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் சச்சின் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

[ பதினெட்டு வயது பாலகன் ப்ரித்வி ஷா இந்திய அணிக்கு ஓபனிங்கா? என்னப்பா இது? ]

அறிமுக போட்டி சதமும், சாதனையும்

அறிமுக போட்டி சதமும், சாதனையும்

குறைந்த வயது சதம் என்ற சாதனையோடு அறிமுக போட்டி சதம் என்ற சாதனையும் சேர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 14 வீரர்கள் அறிமுக டெஸ்டில் சதம் அடித்துள்ளனர். அதில் 15வதாக இணைந்துள்ளார் ப்ரித்வி ஷா. ப்ரித்வி ஷாவுக்கு முன் அறிமுக போட்டியில் சதம் அடித்த 14 வீரர்களில் அசாருதீன், கங்குலி, சேவாக், தவான், சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோரும் உண்டு. சச்சினின் இளம் வயது சதம் மற்றும் கங்குலியின் முதல் போட்டி சதம் என இரண்டையும் தொட்டு இரண்டு ஜாம்பவான்களின் அடையாளத்தோடு தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கியுள்ளார் இளம் புயல் ப்ரித்வி ஷா.

குவியும் வாழ்த்துக்கள்

இவருக்கு வாழ்த்துக்களும் குவிந்துள்ளது ஐசிசி, விவிஎஸ் லக்ஷ்மன், சஞ்சய் மஞ்ச்ரேகர், சேவாக், கைஃப், ஹர்பஜன் என அனைத்து கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

Story first published: Thursday, October 4, 2018, 14:11 [IST]
Other articles published on Oct 4, 2018
English summary
Prithvi shaw hit century in his debut against west Indies in the first test match and these are records made
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X