Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஏமாத்திப்புட்டீங்களே சச்சின்..! எல்லாமே தவிடு பொடியாகிடுச்சே...! ரசிகர்கள் புலம்பல்

Recommended Video

Watch Video : Australia won Ashes 2019 series

மும்பை: ஆஷஸ் தொடரில் நாதன் லயன் தான் முக்கியமான வீரராக இருப்பார் ஜாம்பவான் சச்சினின் கணிப்பு பொய்யானதால் அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் 4போட்டிகள் முடிந்து இருக்கின்றன. 4வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்று, தொடரில் 2க்கு 1 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, கலக்க உலக சாம்பியன் இங்கிலாந்து சொதப்பி வருகிறது.

ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 497 ரன்களை குவிக்க, இங்கிலாந்தோ 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 186 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

383 ரன்கள் இலக்கு

383 ரன்கள் இலக்கு

முதல் இன்னிங்சை போன்று, 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார் ஸ்மித். 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்த நிலையில், 2வது இன்னிங்சை ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ய, 383 ரன்கள் என்ற கடின இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கம்மின்ஸ் அபாரம்

கம்மின்ஸ் அபாரம்

ஆனால், களத்தில் ஆஸி.யின் அபார பவுலிங் இங்கிலாந்தை திணறடித்தது. அந்த அணி, 197 ரன்களுக்கே 2வது இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகி 185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கம்மின்சின் அபார பவுலிங்கில் இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் அவரிடம் 4 விக்கெட்டுகளை இழந்தது.

எனது உள்ளுணர்வு

இங்கிலாந்து தொடக்க வீரர் பர்ன்ஸ், ஜோ ரூட் என 4 முத்தான விக்கெட்டுகளை சாய்தது அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த போட்டிகுறித்து ஜாம்பவான் சச்சின் ஒரு டுவீட் பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்பின்னர் நாதன் லயன் தான் முடிவை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வீரராக இருப்பார், எனது உள்ளுணர்வு சொல்கிறது என்றார்.

எதுவும் இல்லை

எதுவும் இல்லை

ஆனால் முதல் இன்னிங்சில் விக்கெட்டே வீழ்த்தவில்லை லயன். 2வது இன்னிங்சிலாவது அசத்துவார் என்றால், அதுவும் இல்லை. இரண்டாவது இன்னிங்சில் கம்மின்ஸ் தான் விக்கெட்டுகளை வாரி அள்ளிக் கொண்டார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

லயன் எடுத்தது வெறும் 2 விக்கெட்டுகள். சச்சினின் கணிப்பு, பொய்யாகி போனதால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். உலக கோப்பை தொடரில் அவர் 4 அணிகள் தான் செமி பைனலுக்குள் நுழைந்தது. ஆகையால் அவரது கணிப்பை பெரிதும் எதிர்பார்த்திருந்த ஆஸி. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Story first published: Monday, September 9, 2019, 20:11 [IST]
Other articles published on Sep 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+