Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினும், பாண்டிங்கும் மும்பை அணியை இழுத்து மூடிடுவாங்க போல இருக்கு - ஜோன்ஸ் 'பொளேர்'

Sachin Tendulkar, Ricky Ponting 'harming' Mumbai Indians wonders Dean Jones
டெல்லி: சச்சின், பாண்டிங் போன்ற கிழட்டுச் சிங்கங்கள்தான் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்விக்கு காரணம் என்று கிரிக்கெட் விமர்சகர் டீன் ஜோன்ஸ் விமர்சனம் செய்துள்ளார்.

ஐபிஎல் 7வது சீசனில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலை குறித்து அவர் கூறுகையில்:

அந்த அணியில் ஜாம்பவான்கள் நிறையபேர் உள்ளனர். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தனித்திறமை உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் ஆலோசகராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இருந்த நிலையில், கூடுதலாக உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்த ரிக்கி பாண்டிங்கையும் ஆலோசனைக்கு அழைத்து வந்தது மும்பை.

இவர்கள் மட்டுமல்ல, உலகின் நம்பர் ஒன் பீல்டராக இருந்த ஜான்டிரோட்ஸ், ஒரே டெஸ்ட் பந்தையத்தில் 10 விக்கெட் எடுத்த உலக சாதனை நாயகன் அனிகும்ப்ளே ஆகியோர் அணி நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றுகிறார்கள். இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜான்ரைட் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை கோச்சாக உள்ளார். இப்படி அளவுக்குமீறிய பெருசுகள் தலையீடுதான் அணியை குலைத்துவிட்டது.

பெரிய தலைகள் உடன் இருப்பதால் அணி வீரர்கள் தங்களது சொந்த விருப்பத்தின்படி எந்த முடிவயைும் எடுக்க முடியவில்லை. எனவே களத்தில் சோபிக்க தவறுகிறார்கள் என்று போட்டு உடைத்துள்ளார்.

Story first published: Friday, May 2, 2014, 9:39 [IST]
Other articles published on May 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+