சச்சின் வேண்டி விரும்பிக் கேட்டபடியால் 200வது டெஸ்ட் மும்பைக்கே...!
மும்பை: சச்சின் டெண்டுல்கரி்ன் 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அவரது சொந்த ஊரான மும்பையில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
சச்சின் விருப்பபடியே மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தப் போட்டியை நடத்த வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது 199வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுமாம்.

ஓய்வு பெறும் சச்சின்
தனது 200வது டெஸ்ட்போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவித்துள்ளார்.

மும்பையில் ஆட விருப்பம்
தனது கடைசி போட்டியை மும்பையில் ஆட சச்சின் விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பலரும் கூட இப்போட்டி மும்பையில்தான் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

மும்பையில் 200வது டெஸ்ட்
இதையடுத்து மும்பை வாங்கடே மைதானத்திலேயே சச்சினின் 200வது போட்டியை நடத்த வாரியம் முடிவு செய்து அறிவித்துள்ளது.

199வது போட்டி கொல்கத்தாவில்
அதேசமயம், சச்சினின் 199வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பரில் போட்டி
நவம்பர் 14ம் தேதி சச்சினின் 200வது டெஸ்ட் போட்டி தொடங்கி 18ம் தேதி முடியும். மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் இந்தியா இதில் மோதும்.


Click it and Unblock the Notifications