Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

300 எதுக்கு, 400 அடித்து சாதனை படைக்கட்டும்... சச்சினின் பேட் தயாரிப்பாளர் விருப்பம்

பெங்களூர்: சச்சின் டெண்டுல்கர் 300 ரன்களை தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அடிக்க வேண்டும் என்று கவாஸ்கர் விருப்பம் தெரிவித்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் அதையும் தாண்டி 400 ரன்களைக் குவித்து லாராவின் சாதனையை முறியடித்து ஓய்வு பெற வேண்டும் என்று சச்சினுக்கு பேட் தயாரித்துக் கொடுக்கும் பெங்களூரைச் சேர்ந்த ராம் பண்டாரி என்பவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சச்சின் தனது 200வது டெஸ்ட் போட்டியை மும்பை வாங்கடே மைதானத்தில் விளையாடவுள்ளார். இதுதான் அவரது கடைசி டெஸ்ட் போட்டியுமாகும்.

இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் செஞ்சுரி அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், அது என்ன 100.. 200 அடிக்கலாமே, 300 கூட அடிக்கலாம். அதுதான் சச்சின் போன்ற வீரர்களுக்குப் பொருத்தமானது என்று கூறியிருந்தார்.

ஆனால் பெங்களூர் பண்டாரியோ, அது என்ன 300, 400 ரன்களைக் குவித்து லாராவின் உலக சாதனையை சச்சின் முறியடிக்கட்டும் என்று இன்னும் ஒரு படி மேலே போயுள்ளார்.

சச்சினுக்காக 20 பேட் தயாரித்தவர்

சச்சினுக்காக 20 பேட் தயாரித்தவர்

சச்சின் டெண்டுல்கருக்காக 20க்கும் மேற்பட்ட பேட்களைத் தயாரித்தும், ரிப்பேர் செய்தும், புதிதாக வடிவமைத்தும் கொடுத்தவர் இந்த பண்டாரி.

400 ரன் எடுப்பார் சச்சின்

400 ரன் எடுப்பார் சச்சின்

சச்சின் குறித்து பண்டாரி கூறுகையில், லாராவின் சாதனை ஒரு டெஸ்ட் போட்டியில் 400 ரன்களைக் குவித்தது.. அதை சச்சின் முறியடிப்பார் என்று கடவுளை நான் வேண்டி வருகிறேன். அது மட்டும்தான் சச்சினிடம் பாக்கி உள்ளது. அதையும் அவர் செய்ய வேண்டும்.

ஃபன்னி கேம்...

ஃபன்னி கேம்...

கிரிக்கெட் ஒரு ஃபன்னி கேம். எது வேண்டுமானாலும் இதில் நடக்கலாம். யாராவது ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடிப்பார்கள் என்று நாம் நினைத்தோமா.. ஆனால் சச்சின் அதைச் செய்தார். எனவே 400 ரன்களை கடைசி டெஸ்ட் போட்டியி்ல அவர் எடுக்கக் கூடாது என்று எப்படி நாம் நினைக்கலாம். நிச்சயம் அதை சச்சினால் செய்ய முடியும் என்றார் அவர்.

பீகாரிலிருந்து பெங்களூருக்கு வந்தவர்

பீகாரிலிருந்து பெங்களூருக்கு வந்தவர்

1979ம் ஆண்டு பீகாரிலிருந்து பெங்களூருக்கு வந்தவர் பண்டாரி. ஹவஸ் கீப்பராக வேலை பார்க்கிறார். பகுதி நேரமாக பேட் ரிப்பேர் செய்து வருகிறார். பேட்டும் தயாரிக்கிறார்.

டெண்டுல்கருடன் நல்லுறவு

டெண்டுல்கருடன் நல்லுறவு

டெண்டுல்கர் குறித்து மேலும் அவர் கூறுகையில், டெண்டுல்கருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. 2004ல் இது தொடங்கியது டிராவிட்தான் என்னை டெண்டுல்கரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அது முதல் அவரது பேட்களை நான்தான் சரி செய்து கொடுத்து வருகிறேன் என்றார் பண்டாரி.

எடையைக் குறைத்தவர்

எடையைக் குறைத்தவர்

2006ம் ஆண்டு நந்த ஒரு போட்டியில் டெண்டுல்கரின் பேட் அதிக எடையுடன் இருப்பதை சுட்டிக் காட்டிய பண்டாரி எடையைக் குறைக்குமாறு ஆலோசனை கூறினார். அதைத் தொடர்ந்து 1350 கிராம் என்றஎடையிலிருந்து 1250 கிராமாக தனது பேட்டின் எடையைக் குறைத்துக் கொண்டாராம் சச்சின்.

எடையைக் குறைத்து செஞ்சுரி போட்டார்

எடையைக் குறைத்து செஞ்சுரி போட்டார்

அதுகுறித்து பண்டாரிகூறுகையில், எடையைக் குறைத்த பின்னர் மலேசியாவில் நடந்த போட்டியில் 157 ரன்களை விளாசினார் சச்சின். அதன் பிறகு அவர் இனிமேல் 1250 கிராம் எடையிலேயே பேட் தயாரிக்குமாறு என்னைக் கேட்டுக் கொண்டார் என்றார்.

முதல்ல ஸ்டண்ட்மேன்

முதல்ல ஸ்டண்ட்மேன்

பண்டாரியின் வாழ்க்கை முள் பாதையால் ஆனது. ஆரம்பத்தில் அவர் சினிமாவில் ஸ்டண்ட் மேனாக இருந்துள்ளார். பின்னர் டிரைவராக இருந்தார் பிறகு காந்தி நகரில் உள்ள பல அடுக்கு மாடிக் கட்டடத்தின் பராமரிப்பாளராக இருந்தார்.

பேட் ரிப்பேருக்கு மாறினார்

பேட் ரிப்பேருக்கு மாறினார்

அப்போதுதான் அவர் பேட் ரிப்பேர் செய்யும் தொழிலைத் தொடங்கினார். டெண்டுல்கரைச் சந்தித்த பின்னர் அவரது வாழ்க்கை பிரகாசமானதாம்.

எல்லோருடைய பேட்டிலும் இவரது கைவண்ணம்

எல்லோருடைய பேட்டிலும் இவரது கைவண்ணம்

டிராவிட், ஷேவாக், விராத் கோஹ்லி, கம்பீர், சட்டேஸ்வர் புஜாரா, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான் என பல முன்னணி வீரர்களின் பேட்களில் இவரது கைவண்ணம் இடம் பெற்றுள்ளதாம்.

சச்சின் ஓய்வு பெறப் போகிறார்... பண்டாரிஜி நீங்க எப்ப ஓய்வு பெறப் போகிறீர்கள் என்று மட்டும் யாரும் கேட்டு விடாதீர்கள்.

Story first published: Thursday, October 17, 2013, 15:55 [IST]
Other articles published on Oct 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+