உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் விளையாட மாட்டேன்- சச்சின் அறிவிப்பு

ஏற்கனவே உலகக் கோப்பைக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சச்சின் இடம் பெறவில்லை. இருப்பினும், உலகக் கோப்பைப் போட்டியில் சச்சின் விளையாட வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் கோரி வருகின்றனர். இந்த நிலையில்தான் தான் விளையாடப் போவதில்லை என்று சச்சின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சிக்கு சச்சின் அளித்துள்ள பேட்டியில், சர்வதேச அளவிலான டுவென்டி 20 போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன். அது உலகக் கோப்பைப் போட்டிக்கும் பொருந்தும்.
2007ம் ஆண்டிலிருந்தே நான் சர்வதேச டுவென்டி 20 போட்டிகளில் கலந்து கொள்வதில்லை. எனவே இப்போதும் அது அப்படியேதான் உள்ளது என்றார்.
வருகிற வெள்ளிக்கிழமை டுவென்டி 20 தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் சச்சின் இவ்வாறு அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது ஐபிஎல் தொடரில் சச்சின் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக ஆடி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications