Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓராண்டு வருமானம் ரூ.624 கோடி.. அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயம் செய்த சானியா சந்தோக் சொத்து மதிப்பு!

மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு நிச்சயம் செய்துள்ள தொழிலதிபர் மகளான சானியா சந்தோக் குடும்பத்தின் ஓராண்டு சொத்து மதிப்பு மட்டும் ரூ.624 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அர்ஜுன் டெண்டுல்கரின் மணப்பெண்ணின் வருமானத்தை வைத்து வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும், கிரேவிஸ் குரூப் நிறுவனரான ரவி காய் பேத்தி சானியா சந்தோக் ஆகிய இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த நிச்சயதார்த்தில் விமர்சையாக நடைபெற்றுள்ளது. அர்ஜுன் டெண்டுல்கர் - சானியா சந்தோக் இருவரும் நீண்ட காலமாக காதல் உறவில் இருந்துள்ளனர்.

Sachin Son Arjun Tendulkar s Fianc e

சானியா சந்தோக் லண்டனில் படித்த போது, அர்ஜுன் டெண்டுல்கரின் அக்காவான சாரா டெண்டுல்கருடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இவர்கள் மும்பை வரும் போதெல்லாம், அர்ஜுன் டெண்டுல்கரும் இவர்களுடன் இணைந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு, அடுத்த சில மாதங்களில் காதல் மலர்ந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து குடும்பத்தினருக்கு தெரிய வந்த போது, இரு தரப்பும் நேரில் சந்தித்துள்ளனர்.

இதன்பின் குடும்பத்தினர் சம்மதத்தோடு நிச்சயம் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் சானியா சந்தோக் குடும்பத்தின் சொத்து மதிப்பு தெரிய வந்துள்ளது. சானியா சந்தோக் குடும்பத்தினர் மும்பையில் உள்ள இன்டர்காண்டினண்டல் ஹோட்டல் உரிமையாளர்களாவர். அதேபோல் குவாலிட்டி மற்றும் ப்ரூக்லின் ஐஸ் க்ரீம் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் இவர்களின் வருவாய் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலமாக ஓராண்டு வருமானம் மட்டும் ரூ.624 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சானியா சந்தோக் பெட் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மதிப்பு மட்டும் ரூ.4.37 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சானியா சந்தோக்கின் வருவாய் குறித்து ரசிகர்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் இந்திய கிரிக்கெட்டர்களிலேயே பணக்காரர் சச்சின் டெண்டுல்கர் தான். வீடு, ரியல் எஸ்டேட், கிரிக்கெட் அகாடமி, தொழில் முதலீடுகள், உணவகங்கள் என்று மொத்தமாக ரூ.1400 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் தொழில் வளர்ச்சியை அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, August 24, 2025, 16:28 [IST]
Other articles published on Aug 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+