Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் சச்சின் டெண்டுல்கர்.. யுவராஜ் சிங் அணியுடன் மோதல்.. விவரம்

பெங்களூரு : கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்த முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதிலிருந்து எப்போதாவது சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனம் தொடர்பான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது உண்டு.

 Sachin Tendulkar and Yuvraj singh is playing in charity match at bengaluru

கொரோனா காலகட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கிரிக்கெட் போட்டியில் சச்சின் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் தற்போது பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் சச்சின் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். பெங்களூருவில் வரும் 18ஆம் தேதி இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் இருந்து கிடைக்கும் பணம் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட இருக்கிறது.

இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான ஒரு அணியும், யுவராஜ் சிங் தலைமையிலான மற்றொரு அணியும் விளையாட உள்ளது. சச்சின் அணியில் நமன் ஒஜா, பத்ரிநாத், இர்ஃபான் பத்தான், அசோக் டின்டா, அஜந்தா மெண்டிஸ், ஹர்பஜன் சிங், ஆர்பி சிங் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

யுவராஜ் சிங் தலைமையிலான அணியில் பார்த்திவ் பட்டேல், முகமது கைஃப், யூசுப் பத்தான், ஜேசன் கிரிசா, முரளிதரன், மகாயா நீட்னி சமீன்தா வாஸ், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் மீண்டும் ஒருமுறை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Story first published: Tuesday, January 16, 2024, 15:18 [IST]
Other articles published on Jan 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+