சச்சின்னா சும்மா இல்லீங்க... கொரோனாவுக்கும் கைகொடுப்பார்... பார்பருக்கும் கைகொடுப்பார்
மும்பை : தன்னுடைய கிரிக்கெட் கேரியரின்போது மட்டுமின்றி ஓய்விற்கு பிறகும் பல்வேறு நலத்திட்டங்களில் பங்கேற்பதில் சச்சின் தன்னை நிரூபித்து வருகிறார்.
Recommended Video
சமீபத்தில் கொரோனா பாதிப்பிற்கும் பிரதமர் மற்றும் மகராஷ்டிர முதலமைச்சர் நிதிக்கு அவர் பெரிய அளவில் நன்கொடை அளித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி, தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ள பார்பர்களின் நலத்தை பேணும்வகையில் ஜில்லெட்டுடன் கைகோர்த்துள்ளார் கிரிக்கெட் கடவுள்.
பல்வேறு சமூக நலத்திட்டங்களில் கைகோர்த்து சமூக நலனுக்காக தானும் பங்கேற்று வருகிறார் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் தற்போது கைகோர்த்திருப்பது ஜில்லெட் பார்பர் சுரெக்ஷா திட்டத்தில்தான். இதன்மூலம் தற்போது ஊரடங்கு காரணமாக தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பார்பர்களுக்கு விழிப்புணர்வு படம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றுள்ள இந்த விழிப்புணர்வு படம் மூலம் நாட்டு மக்கள், பார்பர் ஷாப்களில் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, பார்பர் ஷாப்களில், பார்பர்களோடும், சக மக்களோடும், கலந்துரையாடும் அழகிய நிகழ்வுகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இதில் பங்கேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதில் ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீமும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் தங்களது பணியை தொடரவுள்ள பார்பர்களுக்கு ஜில்லெட் சார்பில் ஒரு லட்சம் ரூபாய்க்கு இன்சூரன்ஸ், பார்பர் கிட் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின்மூலம் வழங்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications