Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியாவது.. ஸ்மித்தாவது.. ஆயிரம் பேர் வந்தாலும் இதை தொட முடியாது.. சச்சினின் அந்த உச்சகட்ட சாதனை!

மும்பை : கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று தன் 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Recommended Video

Sachin 200 test record, no one can beat

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த மோசமான காலகட்டத்தில் அவர் எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என்ற முடிவில், தன் பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இருந்தாலும் சச்சின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை மறக்க முடியுமா? அவர்கள் சச்சினின் சாதனைகளை பட்டியலிட்டு தங்கள் ஆசையை தீர்த்துக் கொண்டு வருகிறார்கள்.

மலைக்க வைத்த சச்சின்

மலைக்க வைத்த சச்சின்

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற போது அவரது சாதனைகள் கிரிக்கெட் உலகில் பெரும் மலைப்பை ஏற்படுத்தின. அவரது 100 சதம், பல ஆயிரம் ரன்கள் ஆகிய சாதனைகளை எந்த கிரிக்கெட் வீரராலும் முறியடிக்கவே முடியாது என கருதப்பட்டது.

விராட் கோலி

விராட் கோலி

ஆனால், அதே இந்திய அணியில் இருந்து விராட் கோலி என ஒருவர் அவரது சாதனைகளை தொடும் பந்தயத்தில் இறங்குவார் என கிரிக்கெட் உலகம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால், சச்சின் ஆடிய காலத்தில் இருந்த கிரிக்கெட் இப்போது இல்லை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாறிய காலம்

மாறிய காலம்

90களில் இருந்த அச்சுறுத்தும் வேகப் பந்துவீச்சு, தலை சிறந்த ஸ்பின்னர்களான முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே போன்றோர் இப்போது இல்லை. அதே போல, டெஸ்ட் போட்டிகளில் இரண்டு பந்துகள் பயன்படுத்தும் முறை வந்ததால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற பந்துவீச்சே கிட்டத்தட்ட காணாமல் போய் வருகிறது.

10,000 ரன்கள் சாதனை

10,000 ரன்கள் சாதனை

அந்த கடினமான காலகட்டத்தில் சச்சின் செய்த சாதனைகளை இன்று பல இளம் வீரர்கள் எளிதாக முறியடித்து வருகிறார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 10,000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருந்தார். அந்த சாதனையை முறியடித்தார் விராட் கோலி

முறியடிக்க முடியாத சாதனை

முறியடிக்க முடியாத சாதனை

ஆனால், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட் ஆடிய காலம் முழுவதையும் சேர்த்து முறியடிக்க முடியாத மெகா சாதனை ஒன்றை செய்துள்ளார். அது 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சாதனை. அதை இனி எந்த கிரிக்கெட் வீரராவது தொட முடியுமா? என்பது சந்தேகம் தான்.

மலைக்க வைத்த சச்சின்

மலைக்க வைத்த சச்சின்

சுமார் 24 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடி உள்ளார் சச்சின் டெண்டுல்கர். 1989இல் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் துவங்கி 2012ஆம் ஆண்டு மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி வரை நீண்ட, நெடிய கிரிக்கெட் பயணத்தை மேற்கொண்டார்.

அதிக அறுவை சிகிச்சை

அதிக அறுவை சிகிச்சை

அந்த 24 ஆண்டுகளில் பல காயங்களை, அறுவை சிகிச்சைகளை சந்தித்துள்ளார் சச்சின். கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் அளவுக்கு அதிக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால், அதைத் தாண்டி தான் அவர் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடினார்.

மாறிய காலம்

மாறிய காலம்

அதிலும் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். சச்சினுக்கு அடுத்து அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர்கள் - ரிக்கி பாண்டிங் - 168 போட்டிகள், ஸ்டீவ் வாஹ் - 168 போட்டிகள், ஜாக்கஸ் காலிஸ் - 166 போட்டிகள். இனி வரும் தலைமுறை வீரர்கள் 170 போட்டிகளை தாண்டினால் அது மிகப் பெரிய ஆச்சரியம் தான்.

சிக்கல் இதுதான்

சிக்கல் இதுதான்

200 டெஸ்ட் போட்டிகள் சாதனையை முறியடிப்பதில் உள்ள சிக்கல் - குறைந்தது 20 ஆண்டுகள் கிரிக்கெட் ஆட வேண்டும், டி20 கிரிக்கெட் கோலோச்சும் இந்த காலத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளித்து ஆட வேண்டும், அந்த வீரர் ஆடும் அணி அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும்.

சிறந்த வீரர் சச்சின்

சிறந்த வீரர் சச்சின்

இதை எல்லாம் தாண்டி இன்று ஒரு கிரிக்கெட் வீரர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் சிறந்த டெஸ்ட் வீரர்களாக இன்று இருக்கலாம். ஆனால், அதிக போட்டிகளில் ஆடுவதும் ஒரு சிறந்த வீரரால் தான் முடியும். அப்படி ஒரு சிறந்த, யாராலும் தொட முடியாத சாதனையை செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Story first published: Friday, April 24, 2020, 12:52 [IST]
Other articles published on Apr 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+