For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் வருங்கால பவுலர்.. சச்சினையே வியக்கவைத்த சிறுவனின் ஆற்றல்.. வைரல் வீடியோ!

அமீரகம்: சச்சின் டெண்டுல்கரையே மிரள வைக்கும் அளவிற்கு ஒரு சிறுவன் பந்துவீசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரும் ஜாம்பவானாக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். இன்றும் பலர் சச்சினை போன்று வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

அப்படிபட்ட ஜாம்பவான்களையே இன்றைய கால சிறுவர்கள், தங்களது கிரிக்கெட் ஆசைகள் மூலம் வியக்கவைத்து வருகின்றனர்.

சச்சினின் கிரிக்கெட் காதல்

சச்சினின் கிரிக்கெட் காதல்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின், தொடர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்திக்கொண்டு தான் இருக்கிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகர் போன்று அடிக்கடி அவரை டக் அவுட்டில் பார்க்கலாம். இதே போல இந்திய அணியின் முக்கியமான போட்டிகளிலும் சச்சினின் வருகையை நாம் பார்த்திருப்போம். அவர் தற்போது திறமையான குழந்தைகளையும் கண்டறிந்து ஊக்குவித்து வருகிறார்.

வைரல் வீடியோ

அந்தவகையில் சமீபத்தில் அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 5 - 6 வயது உடைய சிறுவன் ஒருவன் அசத்தலான முறையும் பந்துவீசுகிறார். சுழற்பந்துவீச்சு செய்யும் அவர், பந்தை டேர்ன் செய்த விதம் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ஆஃப் சைட், லெக் சைட், வைட் திசையில் போட்டு போல்ட் விக்கெட் எடுப்பது என அனைத்து விதங்களையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

சச்சின் வியப்பு

சச்சின் வியப்பு

இந்த பதிவில் அவர், எனது நண்பர் மூலம் வீடியோ ஒன்று கிடைத்தது. அதில் உள்ள ஒரு சிறுவன் அசத்தலான முறையில் பந்துவீசுகிறார். கிரிக்கெட்டின் மீது அதிக ஈடுபாடும், காதலும் வைத்துள்ள அந்த சிறுவனை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

கமெண்ட்டில் பதிவிட்டுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, சிறுவனின் சுழற்பந்துவீச்சு, நமது தலையை சுழற்ற வைக்கிறது. முன்னாள் வீரர் பிரட்லீ, இந்த சிறுவன் நிச்சயம் எதிர்காலத்தில் விளையாடலாம் எனத்தெரிவித்துள்ளார். இதே போல ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான், அவரின் திறமை சிறப்பாக உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, October 15, 2021, 19:45 [IST]
Other articles published on Oct 15, 2021
English summary
Sachin Tendulkar Blown Away for the Little boy's Talent in spin bowling
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+