எனது 21 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியர்களை எந்த புக்கியும் அணுகியதில்லை-சச்சின்
டெல்லி: எனது 21 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் எனக்குத் தெரிந்து இந்திய வீரர் யாரையும், எந்த புக்கியும் அணுகியதில்லை என்று கூறியுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர்.
பாகிஸ்தன் கிரிக்கெட் வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கியுள்ளது குறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையில், நான் 21 வருடங்களாக கிரிக்கெட்டில் உள்ளேன். எனக்குத் தெரிந்து எந்த புக்கியும் இந்திய வீரர்களை அணுகியதாக நினைவில்லை.
தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருந்தால் நிச்சயம் அது கிரிக்கெட்டுக்கு பெருத்த அவமானமாகும்.
ஸ்பாட் பிக்ஸிங் விவகாரம் குறித்து ஐசிசி விரிவான விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த வீரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சச்சின்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications