கொரோனா இருந்தா என்னங்க... உலக சுற்றுலா தினத்தை எப்படி கொண்டாடுறேன் பாருங்க
மும்பை : கொரோனா பரவல் காரணமாக உலக அளவில் சுற்றுலா பயணிகளின் கொண்டாட்டங்கள் தடை பட்டுள்ளன.
இந்நிலையில் உலக சுற்றுலா தினம் உலகெங்கிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த தினத்தை தன்னுடைய ஸ்டைலில் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கொண்டாடி அதை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
உலக அளவில் சுற்றுலாவை கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது. இந்நிலையில் இன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை கொண்டாட கொரோனா வைரஸ் பரவல் மிகவும் முட்டுக்கட்டையாக உள்ள நிலையில், அதை தன்னுடைய ஸ்டைலில் கொண்டாடியுள்ள முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய தோட்டத்தில் மிதக்கும் ஊஞ்சலில் ரிலாக்சாக கண்களை மூடிக் கொண்டு ஓய்வெடுக்கும் சச்சின், தான் தன்னுடைய மனதிற்கு பிடித்த கனவுலகிற்கு சென்று இந்த சுற்றுலா தினத்தை கொண்டாடுவதாக தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications