Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வினோத் காம்ப்ளிக்கு சவால் விட்ட சச்சின் -ஒரு வாரத்தில் முடிக்க கெடு

Recommended Video

வினோத் காம்ப்ளிக்கு சச்சின் விட்ட சவால்... ஒருவாரம் கெடு| Sachin Tendulkar Challenged vinod Kambli

மும்பை : தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு சவால் விடுத்துள்ளார். அதை செய்து முடிக்க ஒருவார கெடுவும் அளித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி இருவரும் பள்ளிக் கால தோழர்கள், பள்ளி காலத்திலிருந்தே ஒன்றாக கிரிக்கெட் விளையாடத் துவங்கி, இந்திய அணியிலும் ஒன்றாக தொடர்ந்தவர்கள்.

இவர்களது பள்ளி காலத்தில் ஹாரீஸ் ஷீல்டு கோப்பை அரையிறுதியில் ஷர்தாஷ்ரம் வித்யமந்திர் சார்பில் விளையாடி பார்ட்னர்ஷிப்பில் 664 ரன்களை அடித்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த ஆட்டத்தில் இருவரும் ஆட்டமிழக்காமல் முறையே 326 மற்றும் 349 ரன்களை விளாசினர்.

சச்சின் -காம்ப்ளி நட்பு

சச்சின் -காம்ப்ளி நட்பு

கிரிக்கெட் உலகில் பள்ளி காலத்திலிருந்தே ஒன்றாக விளையாடி சர்வதேச அணியிலும் இடம்பெற்று தங்களது திறமையை வெளிப்படுத்திய நீண்டகால நண்பர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வினோத் காம்ப்ளி.

பார்ட்னர்ஷிப்பில் 664 ரன்கள்

பார்ட்னர்ஷிப்பில் 664 ரன்கள்

இவர்கள் இருவரும் இணைந்து தங்களது பள்ளி பருவத்தில் ஹாரீஸ் ஷீல்ட் அரையிறுதியில் தங்களது பள்ளி ஷர்தாஷ்ரம் வித்யமந்திர் சார்பில் போட்டியிட்டு செயிண்ட் சேவியர் உயர்நிலை பள்ளிக்கு எதிராக பார்ட்னர்ஷிப்பில் 664 ரன்கள் குவித்தது தற்போதுவரை சாதனையாக உள்ளது. இருவரும் ஆட்டமிழக்காமல் 326 ரன்கள் (சச்சின்) மற்றும் 349 ரன்கள் (காம்ப்ளி) எடுத்திருந்தனர்.

பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து

பிறந்தநாளுக்கு நேரில் வாழ்த்து

இவர்கள் இருவரின் நட்பு நீண்ட நெடுங்காலங்களாக தொடர்ந்துவரும் நிலையில் கடந்த 18ம் தேதி காம்ப்ளியின் பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்தித்து சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

காம்ப்ளி குறித்து சச்சின்

காம்ப்ளி குறித்து சச்சின்

இந்த சந்திப்பின்போது வெளியிட்ட வீடியோ ஒன்றில் வினோத் காம்ப்ளி தங்களது பள்ளி காலத்திலிருந்தே மிகச்சிறந்த பாடகர் மற்றும் சிறந்த டான்சர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்திருந்தார்.

ஒருவாரம் கெடு

இந்நிலையில், வினோத் காம்ப்ளியை சந்தித்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2017ல் தான் பாடி வெளிவந்த பாடலை பாடி ஆட வேண்டும் என்ற சவாலை விடுத்துள்ளார். இதற்கு ஒருவார கால கெடுவும் விதித்துள்ளார்.

மிகப்பெரிய சவால் என கருத்து

மிகப்பெரிய சவால் என கருத்து

வரும் 28ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தான் கேட்பதை தர வேண்டும் என்ற சச்சினின் இந்த சவாலையடுத்து, காம்ப்ளி உடனடியாக சில அசைவுகள் செய்து காண்பித்தார். ஆனால் சச்சினின் இந்த சவால் மிகவும் பெரியது என்றும் அவர் வீடியோவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

உலக கோப்பை வீரர்களுக்கான பாடல்

கடந்த 2017ல் உலக கோப்பை அணியில் பங்கேற்ற வீரர்களுக்காக பாடகர் சோனு நிகாமுடன் இணைந்து சச்சின் டெண்டுல்கர் பாடல் ஒன்றை பாடியிருந்தார். அதில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களின் பெயர்களை தொடர்ந்து குறிப்பிட்டிருந்தார்.

Story first published: Wednesday, January 22, 2020, 14:49 [IST]
Other articles published on Jan 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+