169 டெஸ்ட் போட்டிகளில் ஆடி சச்சின் டெண்டுல்கர் புதிய சாதனை

டெண்டுல்கர் எது செய்தாலும் அது சாதனையாகவே அமைகிறது. ரன் குவிப்பதில் மட்டுமல்லாமல் போட்டிகளில் கலந்து கொள்வதிலும் அவர் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறார்.
தற்போது அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் சச்சின். இன்று கொழும்பில் தொடங்கிய இந்தியா இலங்கை இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, சச்சின் பங்கேற்கும் 169வது டெஸ்ட் போட்டியாகும். இது ஒரு புதிய சாதனை.
37 வயதாகும் சச்சின், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக மிளிர்ந்து வருகிறார். இந்த நிலையில் இன்று 169வது போட்டியில் பங்கேற்றதன் மூலம், 168 போட்டிகளில் ஆடி சாதனையை தக்க வைத்திருந்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் சாதனையை முறியடித்துள்ளார் சச்சின்.
கடந்த 20 வருடங்களாக ஆடி வரும் சச்சின் 442 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடிய சாதனை தற்போது இலங்கை வீரர் ஜெயசூரியாவிடம் உள்ளது. அவர் 444 போட்டிகளில் ஆடியுள்ளார். இதை முறியடிக்க இன்னும் 3 போட்டிகளே சச்சினுக்குத் தேவை.
168 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13,742 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின். இதில் 48 சதங்ள், 55 அரை சதங்களும் அடக்கம்.
442 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 17,598 ரன்களையும், 46 சதங்களையும் குவித்துள்ளார் சச்சின்.
இவை தவிர ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் போட்ட ஒரே வீரரும் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை 4 வி. இழப்புக்கு 293 ரன்கள்
முன்னதாக இன்று காலை டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 8 ரன்களில் ஆட்டமிழந்தார். தில்ஷன் பெரிய ஸ்கோருக்கு எத்தனித்த போது 41 ரன்களில் அவரை ஆட்டமிழக்கச் செய்தனர் டோணியும், முரளி விஜய்யும் ரன் அவுட் மூலம்.
பின்னர் கேப்டன் சங்கக்காரா 75 ரன்கள் சேர்த்தார். மஹிளா ஜெயவர்த்தனேவின் பங்கு 56 ஆகும்.
முதல் நாள் ஆட்டநேர இறுதியில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்திருந்தது. சமரவீரா 65 ரன்களும், மாத்யூஸ் 26 ரன்களும் எடுத்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications