Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில் சகோதரியுடன் ஊர் சுற்றிய சச்சின் மகள்.. சாரா டெண்டுல்கர் ரியாக்‌ஷன் தான் ஹைலைட்!

மும்பை : சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுகல்கரும், இந்திய வீரர் சுப்மன் கில்லின் சகோதரி ஷானில் சில் இருவரும் ஒரே காரில் நள்ளிரவில் ஊர் சுற்றியுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது.

இந்திய அணியின் அடுத்த தலைமுறைக்கான வீரர்களில் முதன்மையானவராக இருப்பவர் சுப்மன் கில். இளம் வயதிலேயே இந்திய அணிக்காக அனைத்து வடிவங்களிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். 3 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக சுப்மன் கில் உருவெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sachin Tendulkar daughter Sara Tendulkar and Shubman Gill Sister shahneel Gill enjoys together in late night at Mumbai

இவரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா டெண்டுல்கர் இருவரும் காதலித்து வருவதாக நீண்ட ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரும் காதலர் தினத்தன்று ஒரே உணவகத்தில் தனித்தனியே எடுத்த புகைப்படங்கள், சுப்மன் கில்லின் இன்ஸ்டா பக்கத்தில் ஹர்திக் பாண்டியா கொடுத்த கமெண்ட் மூலம் இவர்களின் காதல் விவகாரம் வெளியில் தெரிய வந்தது.

Sachin Tendulkar daughter Sara Tendulkar and Shubman Gill Sister shahneel Gill enjoys together in late night at Mumbai

அதுமட்டுமல்லாமல் அண்மையில் உலகக்கோப்பை தொடரின் போது நடைபெற்ற ஜியோ நிகழ்ச்சியில் சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஆனால் வெளியில் மீடியா இருப்பதை அறிந்து சுப்மன் கில் சாராவுடன் வர மறுத்து உள்ளேயே நின்று கொண்டார். அதேபோல் சுப்மன் கில்லிடம் நேரடியாக, நீங்கள் சாராவை டேட் செய்கிறீர்களா என்று கேட்கப்பட்டது.

அப்போது, இருக்கலாம் என்று பதிலளித்தது கூடுதல் பேசுபொருளாகியது. இந்த நிலையில் இந்திய அணி வீரர் சுப்மன் கில் சகோதரி ஷானில் கில்லும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வருகிறார். நிதீஷ் ராணா உள்ளிட்டோருடன் இவர் பதிவிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகின. இந்த நிலையில் ஷானில் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் மும்பை நகரில் ஒன்றாக ஊர் சுற்றி வருவது தெரிய வந்துள்ளது.

நேற்றிரவு இவர்கள் இருவரும் ஒரே காரில் ஊர் சுற்றிய வீடியோக்கள் வெளி வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர்கள் உடன் ஒரு புகைப்படக்காரரும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் விரைவில் பொதுவெளியில் தங்களது காதலை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, January 21, 2024, 8:03 [IST]
Other articles published on Jan 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+