Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திங்கட்கிழமையும் அழகானதுதான்... அதை சிறப்பாக்கினால்... சச்சின் டெண்டுல்கர் செஞ்சத பாருங்க!

மும்பை : வாரத்தின் முதல் நாளில் தங்களுடைய வேலைகளை துவக்க அனைவருக்கும் ஒரு சோம்பேறித்தனம் இருக்கும்.

ஆனால் தன்னுடைய திங்கட்கிழமையை நேற்றைய தினம் வெகு சிறப்பாக துவக்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Sachin Tendulkar enjoys Monday Blues With A Chilled-Out Session By The Pool

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த அவர், திங்கட்கிழமை மோசமானது என்று யார் கூறியது என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கொரோனா வைரஸ் ஏற்படுத்திய லாக்டவுனை அடுத்து சமூக வலைதளங்களில் அதிகமாக பேசி வருகிறார். அவர் சமையல் செய்த வீடியோ உள்ளிட்டவை ரசிகர்களின் வரவேற்பை வெகுவாக பெற்றது. மேலும் பல வீரர்கள் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்தும் சச்சின் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தன்னுடைய வீட்டின் ஸ்விம்மிங் பூலில் குளித்தபடி அந்த புகைப்படத்தில் சச்சின் காணப்படுகிறார். பின்புலத்தில் அழகான மரங்கள் காணப்படுகின்றன. மேலும் திங்கட்கிழமைகள் மோசமானது என்று யார் சொன்னது என்றும் கேப்ஷனில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவிற்கு முன்னாள் வீரர் ரெய்னா கமெண்ட் செய்துள்ளார்.

Story first published: Tuesday, November 24, 2020, 13:19 [IST]
Other articles published on Nov 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+