For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினின் ரகசிய ஆயுதம் இதுதான்.. 2011 உலகக்கோப்பையில் கிளம்பிய பரபரப்பு.. உண்மையை உடைத்த சச்சின்!

மும்பை : 2011 உலகக்கோப்பை தொடரில் சச்சின் அபாரமாக ஆடினார். அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் அவர் தான்.

Recommended Video

Sachin explains the rumour about his left hand batting in 2011 world cup

அந்த தொடரின் இடையே திடீரென சச்சின் டெண்டுல்கர் எதிரணியை குழப்பத்தில் ஆழ்த்த ஒரு புது ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் என்ற வதந்தி பரவியது.

சச்சின் இடது கையில் பேட்டிங் செய்யப் போகிறார் என்பதே அந்த வதந்தி. அதன் பின்னணி பற்றி பின்னர் விளக்கமாக கூறினார் சச்சின்.

2011 உலகக்கோப்பையில் சச்சின்

2011 உலகக்கோப்பையில் சச்சின்

2011 உலகக்கோப்பை தொடரை இந்தியா கைப்பற்றி தன் இரண்டாவது ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை கைப்பற்றி இருந்தது. அந்த தொடரில் இந்திய அணியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்த இருவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங்.

இந்தியா பயிற்சி

இந்தியா பயிற்சி

அந்த தொடரின் துவக்கத்தில் பெங்களூருவில் இந்திய அணி அடுத்த போட்டிக்காக தயாராகி வந்தது. அப்போது இந்திய அணியின் பயிற்சியில் பரபரப்பு எழுந்தது. காரணம், சச்சின் டெண்டுல்கர் பயிற்சியில் இடது கையில் பேட்டிங் செய்தது தான்.

இடது கையில் பேட்டிங்

இடது கையில் பேட்டிங்

அதிலும் சச்சின் டெண்டுல்கர் இடது கையில் பேட்டிங் பயிற்சி செய்த போது தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார். அந்த செய்தி வேகமாக பரவியது. சில ஊடகங்கள் சச்சின் டெண்டுல்கர் இடது கையில் பேட்டிங் பயிற்சி செய்கிறார் என அவர் சிக்ஸர் அடித்ததை முக்கிய தகவலாக குறிப்பிட்டு செய்தி வெளியிட்டன.

ரகசிய ஆயுதம்

ரகசிய ஆயுதம்

ஒரு பத்திரிக்கை அதுதான் சச்சின் இந்த உலகக்கோப்பையில் பயன்படுத்தப் போகும் ரகசிய ஆயுதம் என்று பில்டப் வேறு கொடுத்தது. உடனே இந்திய ரசிகர்கள் இடையே சச்சின் இடது கையில் பேட்டிங் செய்யப் போகிறார் என்ற வதந்தி பரவியது.

சச்சின் விளக்கம்

சச்சின் விளக்கம்

ஆனால், அந்த தொடரிலும், பின் எப்போதும் சச்சின் டெண்டுல்கர் இடது கையில் பேட்டிங் செய்ததே இல்லை. அது பற்றி பின்னர் சச்சின் டெண்டுல்கர் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்தார். தான் ஏன் அன்று இடது கையில் பயிற்சி செய்தேன் என்றும் கூறினார்.

பள்ளிக் கூட கிரிக்கெட்

பள்ளிக் கூட கிரிக்கெட்

சச்சின் பள்ளிக் கூடத்தில் கிரிக்கெட் ஆடிய போது இடது கை பேட்டிங் செய்துள்ளார். அதுவும் ஒரு வேடிக்கையான காரணத்திற்காக. அப்போது பள்ளிக் கூட போட்டிகளில் ஒரே நாளில் போட்டிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

கைகளை மாற்றி பேட்டிங்

கைகளை மாற்றி பேட்டிங்

அதனால் முதல் இன்னிங்க்ஸ் ஆட்டம் முடிந்த உடன் அனைத்து பேட்ஸ்மேன்களும் தங்கள் கைகளை மாற்றி பேட்டிங் ஆட வேண்டும். அதன் படி இடது கை பேட்ஸ்மேன்கள் வலது கையிலும், வலது கை பேட்ஸ்மேன்கள் இடது கையிலும் பேட்டிங் ஆட வேண்டும்.

இடது கையில் பயிற்சி

இடது கையில் பயிற்சி

அந்த நினைவில் சுழற் பந்துவீச்சாளர் ஒருவரை பந்துவீச சொல்லி விட்டு, இடது கையில் பேட்டிங் செய்துள்ளார் சச்சின். சுழற் பந்துவீச்சில் பந்து மெதுவாக வந்ததால் எளிதாக சிக்ஸர்கள் அடித்துள்ளார். அடுத்த நாள் ஊடகங்களில் சச்சினின் ரகசிய ஆயுதம் இதுதான் என வந்த செய்தியை கண்டு திகைத்துள்ளார்.

ஆசைப்பட்டது தப்பாப் போச்சே

ஆசைப்பட்டது தப்பாப் போச்சே

"ஒரு ஆசைக்கு இடது கையில் பேட்டிங் செய்து பார்த்தது தப்பாப் போச்சே" என சச்சினை நினைக்க வைத்தது அந்த சம்பவம். 2011 உலகக்கோப்பை தொடரின் சச்சின் 9 இன்னிங்க்ஸ்களில் 482 ரன்கள் குவித்தார். இரண்டு சதம் மற்றும் இரண்டு அரைசதம் அடித்து இருந்தார்.

Story first published: Friday, May 1, 2020, 14:08 [IST]
Other articles published on May 1, 2020
English summary
Sachin Tendulkar explains the rumour about his left hand batting in 2011 world cup. He just practiced it in self interest.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+