இறுதி டெஸ்ட்: 74 ரன்களில் சச்சின் 'அவுட்'... தியோனரைன் பந்தில் சமியிடம் 'கேட்ச்' ஆனார்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீர சச்சின் டெண்டுல்கர் தமது 200வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த நிலையில் தியோனரைன் பந்தில் சமியிடம் 'கேட்ச்' கொடுத்து டெண்டுல்கர் அவுட் ஆனார். இதனால் சதமடிப்பார் என்று காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியா வருகை தந்துள்ளது. அந்த அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அது சச்சின் டெண்டுல்கருக்கு 199வது போட்டி.
இதைத் தொடர்ந்து மும்பை வாங்கடே மைதானத்தில் நேற்று 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இது சச்சின் டெண்டுல்கருக்கு 200வது டெஸ்ட். அத்துடன் இந்த டெஸ்ட் தொடருடன் சச்சின் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார்.

38 ரன்களுடன்..
இதனால் சச்சினின் ஆட்டம் குறித்து ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. நேற்று முதல் நாள் ஆட்ட முடிவில் 38 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார் சச்சின்.

அரைசதத்தை கடந்தார்
இன்று 2வது நாளில் சச்சின் அரைசதத்தைக் கடந்து தொடர்ந்து ஆடினார். இது சச்சினின் 68வது அரைசதம்

2011-ல்தான் டெஸ்ட் சதம்
2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில்தான் கடைசியாக சச்சின் டெண்டுல்கர் சதமடித்தார்.

காத்திருந்த ரசிகர்கள்
33 மாதங்களுக்குப் பிறகு சச்சின் மீண்டும் சதமடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர்.

74 ரன்களில் 'கேட்ச்' கொடுத்து அவுட்
ஆனால் டெண்டுல்கர் 74 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். தியோனரைன் பந்தில் சமியிடம் 'கேட்ச்' கொடுத்து கொடுத்து டெண்டுல்கர் அவுட் ஆனார்!

12 பவுண்டரிகள்
மொத்தம் 118பந்துகளை டெண்டுல்கர் எதிர்கொண்டார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். அப்போது இந்திய அணி 221 ரன்களை எடுத்திருந்தது.

உற்சாக வரவேற்பு
சச்சின் சதமடிக்காமல் பெவிலியனுக்கு திரும்பியனாலும் கவுரமான ரன்களை எடுத்ததால் ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர்.

இதுவே கடைசி ஆட்டமா?
கடந்த டெஸ்ட் போட்டியைப் போலவே இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றால் சச்சினின் கடைசி ஆட்டம் இதுவாகவே இருந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications