Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் சொன்ன மாற்றம்.. 4 இன்னிங்சை கொண்டு வாங்க.. செம ஐடியாவா இருக்கே!

மும்பை : சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் போரடித்து வருவதாக கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். டி 20 கிரிக்கெட்டின் வருகைக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் அழியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினர்.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டெஸ்ட் கிரிக்கெட் தற்போது நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் தான் தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

பலரும் ஒருநாள் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டை நாற்பது ஓவராக குறைக்க வேண்டும் என ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

கருத்தரங்கம்

கருத்தரங்கம்

ஏற்கனவே 60 ஓவரில் இருந்து 50 ஓவராக ஒரு நாள் கிரிக்கெட் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர் தற்போது மீண்டும் அதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சச்சின் டெண்டுல்கர், ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

 புதிய பந்துகள்

புதிய பந்துகள்

இது குறித்து பேசிய அவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஒரே மாதிரியான சோர்வு உணர்வை கொடுக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு புதிய பந்துகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டு புதிய பந்துகள் இருந்தால் உங்களால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற யுத்தியை பயன்படுத்த முடியாது. ஆட்டத்தின் நாற்பதாவது ஓவரில் பந்து 20 ஓவர் தான் பழையதாக இருக்கும். ஒரு சராசரியான பந்து 30-வது ஓவர் முதல் தான் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.

4 இன்னிங்ஸ்

4 இன்னிங்ஸ்

இதனால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் பந்துவீச்சாளர்கள் தடுமாறி வருகிறார்கள். இதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் ரன்கள் குவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் போட்டியை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் 15 வது ஓவரிலிருந்து 40 வது வரை மிகவும் போர் அடிக்கிறது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட்டை 25 ஓவர்களாக குறைத்து நான்கு இன்னிங்ஸ்களாக பிரிக்க வேண்டும். அப்படி செய்தால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படும்.

3 இடைவேளைகள்

3 இடைவேளைகள்

உங்களுக்கு மூன்று இடைவேளைகள் கிடைப்பதால் வர்த்தக ரீதியில் கூட இந்த கிரிக்கெட் வெற்றி பெறும். இதேபோன்று ஆடுகளம் குறித்து பேசிய சச்சின் கிரிக்கெட் வீரர்கள் அனைத்து ஆடுகளங்களிலும் விளையாடி பழக வேண்டும் என்று கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் எத்தனை நாள் நடைபெறுகிறது என்று பார்க்காமல் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு கொடுக்கும் அம்சமாக இருக்கிறதா என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டும் என சச்சின் கூறியுள்ளார்.

Story first published: Saturday, March 18, 2023, 22:56 [IST]
Other articles published on Mar 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+