Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் போட்டிகளில் 51வது சதத்தைப் போட்டார் டெண்டுல்கர்

Sachin Tendulkkar
கேப்டவுன்: இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் போட்டிகளில் தனது 51வது சதத்தை இன்று போட்டார்.

கேப்டவுனில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரரான கம்பீரும், சச்சினும் அபாரமாக ஆடி இந்தியாவின் நிலையை ஸ்திரப்படுத்த உதவினார். கம்பீர் 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் மறு முனையில் நங்கூரம் போல நின்று விட்ட சச்சின் அபாரமாக ஆடி சதம் போட்டார்.

இது சச்சினுக்கு 51வது டெஸ்ட் சதமாகும். மேலும், இந்த ஆண்டில் அவர் போட்ட முதல் சதமும் கூட. சச்சின் சதம் போட்டதும் மைதானத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கப் பந்து வீச்சாளர் ஸ்டெயின், சச்சினை அவுட்டாக்க மிகக் கடுமையாக முயன்றார். ஆனால் நடக்கவே இல்லை. கடைசியில் சிக்சர் அடித்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார் சச்சின். தொடர்ந்து ஆடி வருகிறார் அவர்.

இன்றைய ஆட்டத்தில் முக்கிய வீரர்களான லட்சுமண், டோணி ஆகியோர் விரைவிலேயே ஆட்டமிழந்தனர். டோணி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். லட்சுமண் 15 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி விட்டார்.


Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+