ஒருநாள் கிரிக்கெட்டில் வரப் போகும் மாற்றம்.. சச்சின் கொடுத்த "பலே" ஐடியா.. நடவடிக்கை எடுக்குமா ஐசிசி
துபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி அழிவை நோக்கி செல்வதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், அதற்கு புத்துயிர் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டி20, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ஐபிஎல் போன்ற தொடர்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்று கூறி, நட்சத்திர வீரர்கள் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்து வருகின்றனர்.
இதனால், ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இழுத்து மூட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

40 ஓவர்களாக குறையுங்கள்
இதே போன்று சையிது அஃப்ரிடி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் ஓவர்களை ஐம்பதிலிருந்து, நாற்பதாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் தனது முக்கியத்துவத்தை இழந்து வருவதாகவும், அதனை அமர்ந்து பார்க்க மக்களுக்கு பொறுமை இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஏற்கனவே 60 ஓவரிலிருந்து ஐம்பது ஓவர்களாக குறைத்தது போல், தற்போது மீண்டும் ஓவர்களை குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

சச்சின் ஐடியா
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஐடியா கொடுத்து வரும் நிலையில, சச்சின் பல ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன ஐடியா தற்போது மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது சச்சின் கூறியது, ஒருநாள் போட்டியை டெஸ்ட் போட்டியை போல் இரண்டு இன்னிங்சாக மாற்ற வேண்டும்.

2 இன்னிங்ஸ்
ஒவ்வொரு இன்னிங்சையும் 20 ஓவர்களாக மாற்ற வேண்டும். முதலில் பேட் செய்யும் அணி, முதல் இன்னிங்சில் 20 ஓவருக்கு எத்தனை ரன்கள் அடிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இதனைத் தொடர்ந்த அடுத்த அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி, முதலில் பேட் செய்த அணியை விட அதிக இலக்கை தொட வேண்டும்.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டி
அப்படி செய்தால் முதலில் பேட் செய்த அணி டெஸ்ட் போட்டியை போல் 2வது இன்னிங்சில் விளையாடி, ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். தற்போது கடைசி இன்னிங்சில் அந்த அணி, இலக்கை எட்டுகிறதா இல்லை தோல்வி அடைகிறதா என்பதை பொறுத்து முடிவு அறிவிக்கப்பட வேண்டும் என்று சச்சின் கூறினார். டெஸ்ட் போட்டியையும், டி20 போட்டியையம் கலந்து சச்சின் சொன்ன ஐடியா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications