For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விஸ்வரூபம் எடுத்த நெப்போட்டிசம் குற்றச்சாட்டு.... ஒரே ட்வீட்டால் முற்றுப்புள்ளி வைத்த சச்சின்

சென்னை: தன் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மீது வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரே ட்வீட்டால் பதிலடி கொடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் முக்கியமான வீரர்களை குறி வைத்து இந்த ஏலத்திற்காக காத்து இருந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகனை மும்பை அணி ஏலம் எடுத்தது.

ஜாம்பவானின் மகன் என்பதால் சுலபமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என இணையத்தில் பலரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் முதலில் இவர் பெயர் இடம்பெறாமல் இருந்து பிறகு சேர்க்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையானது.

திடீர் ட்விஸ்ட்

திடீர் ட்விஸ்ட்

அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தில் எப்போது விடப்படுவார் என பலரும் காத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் தான் ஏலம் விடப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியே அர்ஜுன் டெண்டுல்கரையும் ஏலம் எடுத்தது.

நெப்போட்டிசம்

நெப்போட்டிசம்

சர்ச்சைகளுக்கு இடையே அர்ஜுன் டெண்டுல்கர் எடுக்கப்பட்டது மிகப்பெரும் திறமையால் அல்ல ஜாம்பவானின் மகன் என்பதால் தான் என இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. மறுபுறம் சையது அலி முஷ்டக் தொடரில் அவரின் சிறப்பான ஆட்டத்தால் தான் ஏலம் எடுக்கப்பட்டார் என ஆதரவு கிளம்பியுள்ளது.

சச்சின் பதிலடி

சச்சின் பதிலடி

சமீபத்தில் கோலி தனது மன அழுத்தம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்துள்ள சச்சின், இந்த காலத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். பலர் அவர்களை பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர்களிடம் பேசுவதில்லை. நாம் தான் அவர்களை சரிபடுத்த உதவ வேண்டும்" என மகன் மீதான விமர்சனத்திற்கும் மறைமுக பதிலடி தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, February 21, 2021, 18:24 [IST]
Other articles published on Feb 21, 2021
English summary
Sachin Tendulkar Indirectly shut son Arjun's critics with one tweet
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X