Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெல்போர்னில் 'கடவுள்'... ரசிகர்கள் + வீரர்கள் உற்சாகம்!

மெல்போர்ன்: இந்திய ரசிகர்களின் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மெல்போர்ன் மைதானத்திற்கு வந்துள்ளார். இந்தியா, தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பைப் போட்டியை அவர் நேரில் பார்த்து ரசித்து வருகிறார்.

சச்சின் டெண்டுல்கர் இல்லாத முதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா ஆடி வருகிறது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான். இருப்பினும் பொன் வைத்த இடத்தில் பூ வைத்துப் பார்ப்பது போல விராத் கோஹ்லியை அடுத்த சச்சினாக வரித்துள்ள இந்தியர்கள், அவரது ஆட்டத்தைப் பார்த்து ரசித்து ஆறுதலடைந்து வருகின்றனர்.

Sachin Tendulkar is at the MCG!

சச்சின் முகத்தை ஸ்கிரீனில் பார்த்த இந்திய ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர். சச்சினும் கைகாட்டி புன்னகையுடன் அதை ஏற்றார். சச்சின் வருகை இந்திய வீரர்களுக்குமே கூட உற்சாகமாக இருந்திருக்கும் போல.. தற்போது ரன் வேகம் சற்றே கூடி வருகிறது. ஒற்றை ரன்கள் அதிகமாகி வருகின்றன. சரியான பந்துகளை பவுண்டரிகளுக்கும் அனுப்பி வருகின்றனர்.

டேவ் ரிச்சர்ட்ஸுடன் பேசிக் கொண்டிருந்த சச்சின் அவருடன் இருப்பது போன்ற செல்பியும் அடுத்து தானும் ஒரு செல்பி பிரியர் என்பதை நிரூபித்தார்.

Story first published: Sunday, February 22, 2015, 10:14 [IST]
Other articles published on Feb 22, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+