Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னுடைய ஹீரோவின் சாதனையை சமன் செய்தது கவுரவம்.. சச்சின் போல் வர முடியாது - விராட் கோலி உருக்கம்

கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்ற விராட் கோலி கிரிக்கெட் வர்ணனையாளரிடம் பேசியதை தற்போது பார்க்கலாம்.

Sachin tendulkar is my hero and equaling his record is proud moment says virat kohli

இது எனக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தது. ஏனென்றால் இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி தான் மிகவும் கடினமான போட்டியாளராக திகழ்ந்தார்கள். இதனால் இந்த அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. அதுவும் எனது பிறந்த நாளில் இந்திய அணிக்காக வெற்றியை தேடி கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும் மக்கள் இந்த நாளை மேலும் ஸ்பெஷல் ஆக எனக்கு மாற்றி விட்டார்கள். இன்று காலை எழுந்திருக்கும் போதே நான் பரவசத்துடன் தான் இருந்தேன். ஏனென்றால் இது ஒரு சாதாரண போட்டி கிடையாது. என் பிறந்தநாள் அன்று விளையாட வாய்ப்பு கிடைத்தது. எங்களுடைய தொடக்க வீரர்கள் இன்று நல்ல அடித்தளத்தை கொடுத்தார்கள். ஆனால் பந்து கொஞ்சம் பழையதாக மாறியவுடன் ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏற்றதாக இல்லை. மேலும் அணி நிர்வாகம் என்னை கடைசி வரை பேட்டிங் செய்ய கூறியிருந்தது. இந்த பொறுப்பை நான் எடுத்துக் கொண்டு விளையாடினேன். 315 ரன்கள் கடந்த உடன் நல்ல இலக்கை நெருங்கி விட்டோம் என்று தோன்றியது.

என்னுடைய கிரிக்கெட்டை நான் மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் நான் சந்தோஷமாக இருக்க கடவுள் எனக்கு ஆசிர்வாதம் செய்து இருக்கிறார் என நினைக்கிறேன். இதனால்தான் இத்தனை ஆண்டுகள் செய்ததை மீண்டும் என்னால் மகிழ்ச்சியாக செய்ய முடிகிறது. என்னுடைய சதத்திற்கு சச்சின் வாழ்த்து அனுப்பியதை பார்த்தேன். இந்த தருணத்தில் என்னால் அத்தனையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஏனென்றால் நான் ஹீரோவாக பார்த்த நபரின் சாதனையை சமன் செய்திருப்பது மிகவும் ஸ்பெஷலான தருணமாக நினைக்கிறேன்.இது எனக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். ஆனால் சச்சின் போல் என்னால் பேட்டிங் செய்ய முடியாது. அந்த ஒப்பிட்டு தவறு என்று தான் நான் சொல்லுவேன். நான் இப்போது மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறேன். ஏனென்றால் நான் எங்கிருந்து கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று எனக்கு தெரியும். சச்சினை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்த நாட்கள் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. சச்சினிடமிருந்து இப்படிப்பட்ட வாழ்த்து எனக்கு கிடைத்தது நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன்.

Story first published: Sunday, November 5, 2023, 21:12 [IST]
Other articles published on Nov 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+