சச்சின் தான் என்னுடைய ரோல் மாடல்.. ஆனால் என்னால் அவரை மாதிரி விளையாட முடியாது.. தோனி நெகிழ்ச்சி
ஓசூர் : சச்சின் தான் என்னுடைய ரோல் மாடல் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஓசூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி இணைந்து கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தோனி பங்கேற்று மாணவர்களுடன் உரையாடினார். அப்போது, தோனி பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தோனியிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் மற்றும் ரோல் மாடல் யார் என்று கேள்வி எழுப்பினார்.

சச்சின் ரோல் மாடல்
அதற்கு பதில் அளித்த தோனி, எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் மற்றும் ரோல் மாடல் என்றால் சச்சின் தான். உங்கள் வயதில் இருக்கும் போது தான் சச்சினின் ஆட்டத்தை பார்த்து ஈர்க்கப்பட்டேன். சிறு வயதில் சச்சின் மாதிரியே விளையாட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் வளர்ந்த பிறகு தான் சச்சின் மாதிரி விளையாட முடியாது என்ற உண்மை எனக்கு தெரிய வந்தது.

விளையாட்டு பிடிக்கும்
சச்சின் தான் சிறு வயதில் இருந்தே என்னுடைய ஹீரோ என்று அவர் கூறினார். இதனை தொடர்ந்து பள்ளியில் உங்களுக்கு பிடித்த பாடம் எது என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு தோனி விளையாட்டு ஒரு பாடம் என்றால், எனக்கு PT தான் பிடிக்கும் என்று பதில் அளிக்க, மாணவர்கள் கைத்தட்டி கூச்சலிட்டனர்.

மாணவர்களுக்கு அறிவுரை
இதனைத் தொடர்ந்து பேசிய தோனி பள்ளி பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களையும், பலமான கேரக்டர்களை வளர்த்து கொள்ள வேண்டும். அங்கு கற்கும் பழக்க வழங்கள், உங்கள் வாழ்க்கையில் நீண்ட நாட்கள் உங்களுடன் பயணிக்கும். நீங்கள் யார் என்று அது உங்களுக்கு அதை காட்டும். உங்களுக்கு இருக்கும் நேரத்தை நீங்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பயன்படுத்தி கொள்ளுங்கள்
உங்களுக்கு பள்ளியில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று தோனி அறிவுரை வழங்கினார். ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் அகாடமியில் மொத்தம் 8 பிட்ச்கள் இருக்கின்றன. பெங்களூரு அருகே உள்ளதால், சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இங்கு வந்து பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications