For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியக் கடவுள்களில் ஒருவர் சச்சின்: ராகுல் டிராவிட் புகழாரம்

By Siva

லண்டன்: இந்தியாவில் பல கடவுள்கள் உள்ளனர் அதில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர் என்று கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி கொடுத்த விருந்தில் இந்திய அணி வீரர்கள், மேற்கிந்திய தீவுகளின் பேட்டிங் ஜாம்பவான் லாரா, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் கூறியதாவது,

சச்சின் தனது 16 வயதில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். அவருக்கும் 38 வயது ஆகிவிட்டது. ஆயினும் இன்று வரை அவரை மிஞ்ச ஆளில்லை. உலகிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் தான். நான் சச்சின் 100வது சர்வதேச சதம் அடிப்பதைப் பார்க்க நான் லார்ட்ஸ் மைதானம் செல்லவிருக்கிறேன் என்றார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அலெக் ஸ்டூவர்ட் சச்சின் தான் நவீன பிராட்மேன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் கூறுகையில், இந்தியாவில் பல கடவுள்கள் உள்ளனர். அதில் சச்சினும் ஒருவர் என்றார்.

சச்சின் சிறப்பான வீரர் என்றால், ராகுல் நின்று விளையாடுபவர், அதனால் தான் தி வால் என்று அழைக்கப்படுகிறார் என்று லாரா கூறினார்.

Story first published: Friday, June 1, 2012, 14:54 [IST]
Other articles published on Jun 1, 2012
English summary
India's wall Rahul Dravid has praised his fellow cricketer Sachin by describing him as one of the Indian gods. West Indies batting legend has told that Sachin is the best batsman in the world while former England captain Alec Stewart called the little master as the modern day Bradman.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+