Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை அவுட் ஆக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.. இந்திய ஜாம்பவானை ஆஹா ஓஹோவென புகழ்ந்து தள்ளிய ஆஸி. வீரர்!

மெல்போர்ன் : கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்றும், ரசிகர்களால் கிரிக்கெட் கடவுள் என்றும் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் புகழ்ந்து தள்ளி உள்ளார்.

Recommended Video

Sachin is the best technical batsmen says Clarke

பேட்டிங்கில் டெக்னிக்கல் விஷயத்தில் அவர்தான் தான் பார்த்ததிலேயே சிறந்த வீரர் என புகழாரம் சூட்டி உள்ளார்.

மேலும், சச்சின் அவுட் ஆக்க மிகவும் கடினமான வீரர் எனவும் கூறி இருக்கிறார் மைக்கேல் கிளார்க்.

நூறு சதம்

நூறு சதம்

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் போல 20 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய வீரர் யாரும் இல்லை என்றே சொல்லலாம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நூறு சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. அவர் செய்த சாதனைகளுக்கு அளவே இல்லை.

ஆதிக்கம்

ஆதிக்கம்

கிரிக்கெட் உலகில் ஆகச் சிறந்த வேகம் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் அத்தனை பேட்ஸ்மேன்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தினார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் அவுட் ஆனால் தொலைக்காட்சியை அணைத்துவிடும் ரசிகர்களே இந்தியாவில் அதிகம் இருந்தனர்.

பேட்டிங் அடிப்படை

பேட்டிங் அடிப்படை

சச்சின் டெண்டுல்கர் தன் துவக்க காலத்தில் அந்த காலத்தின் அதிரடி பேட்ஸ்மேனாக ஆடத் துவங்கினார். பேட்டிங்கின் அடிப்படைகளில் எப்போதும் கவனம் செலுத்தி அதை மெருகேற்றி வந்தார். அதுவே அவரை உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றியது.

புகழாரம்

புகழாரம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தான் சந்தித்த உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பது பற்றி பேசினார். அப்போது சச்சின் டெண்டுல்கர் பற்றி குறிப்பிட்டு புகழாரம் சூட்டினார் மைக்கேல் கிளார்க்.

கடினமான பேட்ஸ்மேன்

கடினமான பேட்ஸ்மேன்

":நான் பார்த்ததிலேயே டெக்னிக்கலாக சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் தான். அவுட் ஆக்க மிகவும் கடினமான பேட்ஸ்மேன். சச்சினுக்கு டெக்னிக்கலாக எந்த வீக்னசும் இல்லை. நம்மில் ஒரு பகுதி அவர் தவறு செய்தார் என நம்பிக் கொள்ள வேண்டியது தான்" என கூறி உள்ளார் மைக்கேல் கிளார்க்.

விராட் கோலி

விராட் கோலி

அடுத்து தற்போதுள்ள வீரர்களில் யார் சிறந்தவர் என குறிப்பிட்ட மைக்கேல் கிளார்க், விராட் கோலியை குறிப்பிட்டார். மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் தான் தற்போது சிறந்த பேட்ஸ்மேன் என்றார் மைக்கேல் கிளார்க்.

கோலி சாதனை

கோலி சாதனை

டி20, ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 50க்கும் மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வித கிரிக்கெட்டிலும் ஒரே நேரத்தில் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ள சாதனையை செய்துள்ள ஒரே வீரர் அவர் மட்டுமே.

ஒற்றுமை இதுதான்

ஒற்றுமை இதுதான்

விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் இடையே உள்ள ஒற்றுமை பற்றியும் பேசினார் மைக்கேல் கிளார்க். இருவருமே பெரிய சதங்கள் அடிப்பதை விரும்புபவர்கள் என குறிப்பிட்டார் கிளார்க். சச்சினின் நூறு சர்வதேச சதங்கள் சாதனையை முறியடிக்க வாய்ப்பு உள்ள ஒரே வீரராக விராட் கோலி அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, April 11, 2020, 11:11 [IST]
Other articles published on Apr 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+